ஜிம், மருந்து இல்லாமல் எலும்பு வலிமை... இத செஞ்சாலே நல்ல ரிசல்ட்!

ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம், நம் வாழ்வை நீண்ட காலம் நலமுடன், மகிழ்ச்சியுடன் வாழ முடியும். எனவே, இந்த சிறிய மாற்றங்களை அன்றாட வாழ்க்கையில் மேற்கொண்டு, உறுதியாக நலத்தைக் காக்க முயற்சிப்போம்.

ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம், நம் வாழ்வை நீண்ட காலம் நலமுடன், மகிழ்ச்சியுடன் வாழ முடியும். எனவே, இந்த சிறிய மாற்றங்களை அன்றாட வாழ்க்கையில் மேற்கொண்டு, உறுதியாக நலத்தைக் காக்க முயற்சிப்போம்.

author-image
WebDesk
New Update
bone health

உடலுக்கு தேவையான வடிவம் கொடுப்பதும், இயக்கங்களைச் சிறப்பாக நடத்துவதற்கும் அடிப்படையாக இருந்தும், உள்ளுறுப்புகளை காயமடையாமல் பாதுகாப்பதும் எலும்புகள் தான் செய்யும் முக்கிய பங்கு. காலப்போக்கில் எலும்புகளின் அடர்த்தி குறைந்து, ஆஸ்டியோபொரோசிஸ் போன்ற பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு அதிகமாகிறது.

Advertisment

ஆனால் நம் வாழ்வியல் முறையில் சில எளிய 6 பழக்கங்களை தினமும் தவறாமல் கடைப்பிடிப்பதன் மூலம், வாழ்நாள் முழுவதும் எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதியாகக் காக்கலாம். அந்த 6 பழக்கங்கள் என்னென்ன என்பதனை இப்பதிவில் விரிவாக அறிந்து கொள்வோம்.

கால்சியம் நிறைந்த உணவுகள்:

எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க பால், தயிர், சீஸ் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளுடன் சேர்த்து, ஆல்மண்ட்ஸ், டோஃபு, பச்சை இலைகள் மற்றும் காய்கறிகளையும் தினமும் உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் அவசியம். தினசரி 1000-1200 மில்லிகிராம் கால்சியம் உடலில் சேர்ப்பதை கவனித்து பின்பற்றுவது எலும்புகளின் நலனுக்கு முக்கியமாக உதவும்.

வைட்டமின் டி அளவு

தினமும் 10-15 நிமிடங்கள் சூரிய ஒளியை உடலில் நேரடியாக அனுமதிப்பது, உடல் தேவையான வைட்டமின் D உற்பத்திக்கு உதவுகிறது. வைட்டமின் D கால்சியத்தை உடலில் சரியாக உறிஞ்சி, கனிமச் சத்துக்களை எலும்புகளில் சேமிப்பதற்கு மிகவும் அவசியம். சூரிய வெளிச்சம் குறைவான நாட்கள் மற்றும் குளிர்காலங்களில், வைட்டமின் டி தேவையை பூர்த்தி செய்ய கொழுப்பு நிறைந்த மீன், முட்டை மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுகளை உணவில் சேர்க்கலாம்.

Advertisment
Advertisements

உடற்பயிற்சி செய்தல்

டம்பெல்ஸ் மற்றும் தசைகளை வலிமையாக்கி உடல் அளவை அதிகரிக்க உதவும் ரெசிஸ்டன்ஸ் பேண்ட் பயிற்சிகள், எலும்புத் திண்மம் மேன்மையடையவும் உதவி புரியும். இதனால் எலும்புகளின் கட்டமைப்பு வலுவடையும். மேலும் எலும்புகள் சமநிலைத் தன்மையுடன் உடலின் இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றவும் முடியும்.

சரிவிகித உணவு

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி மட்டுமல்லாமல், வைட்டமின் கே, மக்னீசியம் மற்றும் புரதம் போன்ற சத்துகளும் அவசியம். இவை முழுதானியங்கள், முட்டைகோசு, பச்சை இலை காய்கறிகள் மற்றும் நட்ஸ் போன்ற உணவுகளிலிருந்து பெற முடியும்.

புகையிலை மற்றும் மதுப்பழக்கம்

சிகரெட் புகைப்பது எலும்புகளின் அடர்த்தியை குறைக்கும். மேலும், ஆல்கஹால் கால்சியம் உடலில் உறிஞ்சப்படுவதை தடுக்கும் காரணமாக செயல்பட்டு, எலும்புகளின் பலத்தன்மையை பாதிக்கிறது. எனவே, இவை இரண்டையும் தவிர்க்கும் பழக்கம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

தரமான உறக்கம்

இரவு நேரத்தில் நல்ல முறையில் உறங்கி ஓய்வெடுப்பது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியம். குறைந்த தரமான தூக்கம் எலும்பு அடர்த்தியை பாதிக்கக்கூடும் மற்றும் ஹார்மோன் உற்பத்தியில் சீர்கேடுகளை ஏற்படுத்தும், இது பலவிதமான உடல் சுகாதாரப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தினமும் 7 மணி நேரம் தூங்குவது, மெடிடேசன் மற்றும் மூச்சு பயிற்சிகளை செய்து உடல் முழுமையான நலத்தை பெற உதவும்.

மேலே குறிப்பிடப்பட்ட எளிய, ஆனால் முக்கியமான வழிமுறைகளை நாமும் தன்னிச்சையாக பின்பற்றுவோம். இதனால் நமது எலும்புகள் வலுவாகி, உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, நாளாந்த வாழ்கையில் சுறுசுறுப்பாக இருக்க முடியும்!

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: