Advertisment

செலவே இல்லாமல் சூப்பர் எனர்ஜி... கருவேப்பிலை ரசம் ஒரு முறை வச்சு சாப்பிட்டுப் பாருங்க!

Simple and easy Rasam Recipe Tamil News செலவே இல்லாமல் அதிக எதிர்ப்பு சக்தி கொடுக்கும் இந்த எளிமையான ரசம் எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Simple and easy Rasam Recipe Tamil News

Simple and easy Rasam Recipe Tamil News

Simple and easy Rasam Recipe Tamil News : இந்த கொரோனா பரவல் காரணமாக பலர் வீட்டிலேயே ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு வகைகளை சமைத்து சாப்பிடுகின்றனர். அந்த வரிசையில் காலங்காலமாக ரசத்திற்கு தனி இடம் உண்டு. செலவே இல்லாமல் அதிக எதிர்ப்பு சக்தி கொடுக்கும் இந்த எளிமையான ரசம் எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

மிளகு - 1 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கையளவு

பூண்டு - 6 பல்

தக்காளி - 1

கடுகு - 1 ஸ்பூன்

வெந்தயம் - 1/4 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கொத்தமல்லி - சிறிதளவு

புளி - சிறிய எலுமிச்சை பழ அளவு

உப்பு - தேவையான அளவு

பெருங்காயத்தூள் - சிறிதளவு

எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து எடுத்து கொள்ளவும். பிறகு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

இப்போது, வாணலியில் எண்ணெய் ஊற்றி அது நன்றாகக் காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். பின்னர் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

பிறகு மிக்சியில் அரைத்து வைத்த பேஸ்ட் மற்றும் கரைத்து வைத்த புளியை ஊற்றி நன்கு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

பிறகு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி தூவி ரசம் லேசாக நுரை தட்டி வரும் வரை காத்திருக்கவும்.

அவ்வளவுதான், சூப்பரான கறிவேப்பிலை ரசம் தயார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes Rasam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment