Simple and Healthy Pepper Kuzhambu Recipe Tamil News : காய்கறிகள் இல்லாமல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குழம்பு வகை பற்றித் தெரியுமா? உடல்வலி முதல் சளி , இருமல், தொண்டை கரகரப்பு என பல்வேறு வகையான உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குச் சிறந்த மருந்தாகவும் இந்த குழம்பு இருக்கும். ஆம், இந்த குழம்பில் அடிப்படை இன்க்ரிடியன்ட் மிளகு. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதில் மிளகிற்கு அதிக பங்கு உண்டு. அப்படிப்பட்ட மிளகை மட்டுமே பயன்படுத்தி, சுவையான அதே சமயம் ஆரோக்கியமான குழம்பை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
பூண்டு – 15 பற்கள்
புளி – 1 எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு
மல்லி (தனியா) - 3 டேபிள்ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன்
தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
முதலில் புளியை ஊற வைக்கவும்.
பிறகு, குழம்புக்குத் தேவையான பொடியை அரைத்துக்கொள்ளுங்கள். அதற்கு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அது நன்கு காய்ந்ததும் அரைக்கத் தேவையான பொருள்களைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும்.
சூடு போனதும், வறுத்த பொருள்களை மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
வேறொரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
பிறகு அரைத்து வைத்த பொடியை அந்தக் கலவையோடு சேர்க்கவும். இதனோடு, ஊறவைத்த புளியைக் கரைத்து ஊற்றவும்.
பிறகு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குழம்பை நன்கு கொதிக்கவிடவும்.
தொடர்ந்து, ஒரு கடாயில் தாளிப்பு பொருள்களைச் சேர்த்துத் தாளித்து, கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும்.
குழம்பை நன்கு கிளறிவிட்டு ஃபிரெஷ் கொத்தமல்லித் தழை தூவி அடுப்பை அணைக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மிளகுக் குழம்பு ரெடி.
வறுத்து அரைக்கும் பொடியை சேமித்து வைத்துக்கொண்டு, தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil