கையே தொடாமல் கருத்துப் போன பாத்திரம் பளிச்...தீக்குச்சி பதத்து போகாமல் இருக்க சிம்பிள் கிட்சன் டிப்ஸ்!
அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடிய நமக்கு தேவையான சில கிட்சன் டிப்ஸ்களை இந்த செய்திக் குறிப்பில் காணலாம். இவற்றை பின்பற்றும் வழிமுறையும் மிக சுலபமாக இருக்கும்.
வீட்டி பராமரிப்பில் பின்பற்றக் கூடிய சில எளிமையான டிப்ஸ்கள் குறித்து அடிக்கடி இணையத்தில் தேடி இருப்போம். அந்த வகையில் நம் வேலையை சுலபமாக்கும் சில சிம்பிளான டிப்ஸ்களை தற்போது பார்க்கலாம்.
Advertisment
வீட்டில் குழந்தைகள் இருந்தால், சுவர்களில் கலர் பென்சில்கள் கொண்டு எழுதி வைத்திருப்பார்கள். இதனை சுத்தப்படுத்துவது மிகவும் சவாலாக இருக்கும். ஆனால், இதனை சுலபமாக நம்மால் மாற்ற முடியும். அதன்படி, பாத்திரம் தேய்க்க பயன்படும் ஸ்க்ரப்பரை அடுத்து, அதில் சிறிதளவு பேக்கிங் சோடா தடவிக் கொள்ள வேண்டும். இதைக் கொண்டு சுவர்களை துடைத்தால், அதில் இருக்கும் கலர் பென்சில் கறைகள் அனைத்தும் எளிதாக நீங்கி விடும்.
வீட்டில் குப்பைகளை அள்ளுவதற்கு பயன்படும் முறம் பெரும்பாலும் அசுத்தமாக இருக்கும். குறிப்பாக, அதில் ஈரப்பதம் இருந்தால் மண் உள்ளிட்டவை ஒட்டிக் கொள்ளும். எனவே, முறத்தை அப்படியே பயன்படுத்தாமல் அதன் மீது பாலித்தீன் கவரை சுற்றிக் கொள்ளலாம். இப்படி செய்வதால் முறம் சுத்தமாக இருக்கும். க்ளீனிங் வேலையும் எளிதாக முடியும்.
அடிக்கடி பயன்படுத்தக் கூடிய அலுமினிய பாத்திரங்கள் சீக்கிரமாகவே கருத்து விடும் தன்மை கொண்டவை. இந்த கருமையை போக்குவதற்கு, அடுப்பை ஆன் செய்து அதில் அலுமினிய பாத்திரத்தை வைக்க வேண்டும். இந்தப் பாத்திரத்தை சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் நன்றாக சூடுபடுத்த வேண்டும். இப்படி செய்தால் பாத்திரத்தின் கருமை நீங்கி புதியது போன்று மாறிவிடும். இதற்காக பேக்கிங் சோடா, உப்பு போன்ற எந்த விதமான பொருட்களையும் நாம் பயன்படுத்த வேண்டியதில்லை.
Advertisment
Advertisements
தீப்பெட்டிகளை அடிக்கடி திறந்து குச்சிகளை உரசும் போது அவை சீக்கிரமாக பதத்து விடும். இதை தடுப்பதற்காக, தீக்குச்சிகள் அனைத்தையும் சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் போட்டுக் கொள்ளலாம். இத்துடன் சிறிது அரிசியையும் சேர்த்து போட்டால், குச்சிகள் பதத்துப் போகாமல் இருக்கும். மேலும், தீப்பெட்டியில் குச்சியை உரச பயன்படும் பகுதியை தனியாக வெட்டி, அதனை பிளாஸ்டிக் டப்பா மூடியின் உட்புறத்தில் ஒட்டி விடலாம். பின்னர், குச்சிகளை இதில் இருந்து உரசி பற்ற வைக்கலாம். இந்த முறை மிக எளிமையாக இருக்கும்.