கடல் மீன் உணவுகளில் தவிர்க்க முடியாதது நண்டு. கணுக்காலிகள் எனச் சொல்லப்படும் நண்டுகள், சிப்பி இனத்தைச் சேர்ந்தவை. நண்டுகளில் பல வகை உண்டு. நண்டுகளைப் பல சுவைகளில் சமைக்கலாம். அதில் முக்கியமானது, நண்டுக்கால் ரசம். நண்டுக்கால் ரசம், சுவையானது மட்டுமல்லாமல், சளித் தொல்லை, ஜலதோஷம் போக்கும் மருந்தாகப் பயன்படுகிறது என்பதுதான் விசேஷம்.
நண்டு மசாலா என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரு கை பார்த்துவிடுவார்கள், இந்த நண்டு மசாலா பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக சமைக்கப்படுகிறது. சில சமயங்களில் நண்டை மிகவும் பிடித்தவர்கள் கூட நண்டு ரசம், நண்டு குழம்பு, நண்டு கிரேவி போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்த்துவிடுவார்கள்.
நண்டு ரசம்:
காரணம், நண்டு உடல் சூட்டை அதிகப்படுத்தி விடும் என்பதால்தான். அதே போல் பலருக்கும் நண்டு சாப்பிட்ட மறுநாள் உடல் உஷ்ணம் அதிகமாகி வயிற்று வலி போன்றவையும் ஏற்பட்டு விடும். இவை அனைத்தையும் மொத்தமாக தவிர்த்திட நண்டு சமையலில் கண்டிப்பாக சிறிதளவு நெய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பல வீடுகளில் அசைவு உணவில் நெய் சேர்ப்பதை தவிர்ப்பார்கள். ஆனால் நண்டு சமையலில் மட்டும் நெய் சிறிதளவு சேர்ப்பது சூட்டை குறைக்க பயன்படுகிறது. காரணம், நெய்யில் இயற்கையாகவே சூட்டை குறைக்கும் பண்பு உள்ளதால், தாளிப்பின் போது சிறிதளவு நெய் சேர்ப்பது நல்லது.
சமையல் குறிப்புகள்:
1. பூரிக்கு மாவு பிசையும் போது ஒரு கரண்டி ரவையை சேர்த்துப் பிசைந்தால் பூரி உப்பலாக இருக்கும்.
2. துவையல்களை அரைக்கும்போது மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைத்து உண்டால் உடலில் உள்ள கொழுப்பு குறையும்.
3. துவரம் பருப்பை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
4. தேங்காயை சிறுதுண்டுகளாக்கி தயிரில் போட்டு வைக்க தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்.
5. சில சமயம் இட்லி மாவு உளுந்து விளுது காணாமல் கல் மாதிரி இருக்கும், மாவில் 2 ஸ்பூன் நல்லெண்ணை விட்டு கலந்து பின் இட்லி வார்த்தால் மெதுவாக சுவையாக இருக்கும்.
6. உடல் பருமன் குறைய உணவில் அடிக்கடி கொள்ளுப்பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும்