அன்றாட உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டிய பொருள் முட்டை. இந்த முட்டையை 3 வேளையும் எடுத்துக் கொண்டால் எனர்ஜியாக இருக்க முடியும். எல்லா விதமான உணவுகளுடனும் சேர்த்து இதனை உட்கொள்ளலாம்.
ஆம்லெட் :
குறிப்பாக ஆம்லெட் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான டிஸ். இதை விரும்பாத குழந்தைகளே இருக்க மாட்டார்கள். ஆம்லெட் போடும் போது எப்போதும் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். முட்டையை உடைத்து ஊற்றும் போது அதன் மஞ்சள் பகுதியை கவனிக்க வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2018/08/1-46-1024x683.jpg)
முட்டையின் ஓட்டை உடைத்து விட்டு அதன் உள்ளே இருக்கும் மஞ்சள் கரு எந்த நிறத்தில் இருக்கும் என்பதை கட்டாயம் கவனிக்க வேண்டும். சில சமயங்களில் கடைகளில் இருந்து வாங்கி வரும் முட்டைகள் சில கெட்டுப் போனதாக இருக்கும்.
அதை எப்படி கண்டுப்பிடிப்பது என்றால் மஞ்சள் கருவில் மெல்லியதாக சிவப்பு நிறம் கலந்து இருக்கும். அப்படியென்றால் அது கெட்டுப்போன முட்டை, அந்த முட்டையை ஆம்லெட், ஆஃப் பாயில் போட்டு சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு ஏற்படும்.