பெண்களுக்கு தேவையான கிச்சன் டிப்ஸ் மற்றும் வீட்டுக்குறிப்புகள் பற்றி பார்ப்போம். என்னதான் வீட்டை சுத்தமாக வைத்தாலும் வீடும் கிச்சனும் சுத்தமாக இல்லையா? அப்போ இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்கள்.
டிப்ஸ் 1: முருங்கைக் கீரையில் இருந்து காம்புகளை உருவி எடுப்பது பிரச்சனையாக இருந்தால் அதில் இருக்கும் பெரிய காம்புகளின் நீக்கிவிட்டு இலைகளுடன் இருக்கும் சிறிய காம்புகளை அப்படியே ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு கலந்து விட்டு ஒரு ஐந்து நிமிடம் மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து தண்ணீரில் இருந்து இலைகளை தனியாக எடுத்து வைத்துவிட்டு பார்த்தால் சிறு சிறு காம்புகள் அனைத்தும் தண்ணீரிலேயே தங்கிவிடும்.
டிப்ஸ் 2: தினமும் டீ குடிப்பவர்களா நீங்கள் டீயை இன்னும் சுவையாக்க டீ தூளுடன் சுக்கு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து டப்பாவில் வைத்துக் கொள்ளலாம். எப்போதும் டீ போடும்போது இதை பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
டிப்ஸ் 3: காய்ந்த திராட்சை நாளாக நாளாக ஒன்றாக ஒட்டி சாப்பிட முடியாத அளவிற்கு உள்ளதா? அப்படி இருக்கையில் இந்த காய்ந்த திராட்சைகளை ஒரு பவுலில் கொட்டி அதில் அரிசி மாவு சிறிது சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். இதனை எடுத்து ஒரு டப்பாவில் வைத்துக் கொண்டால் எவ்வளவு நாள் ஆனாலும் பிரஷ் ஆகவே இருக்கும்.
டிப்ஸ் 4: மீதியான சாதத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதில் கோதுமை மாவு, அரிசி மாவு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதனை ஒரு பவுலில் போட்டு கோதுமை மாவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். எண்ணெய் சேர்த்து ஒரு 10 நிமிடம் ஊறவைத்து சப்பாத்தி சுட்டு சாப்பிட்டால் சூப்பராக சாஃப்டாக இருக்கும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்:
அடேங்கப்பா இது வேறலெவல் ஐடியாவா இருக்கே kitchen tips in tamil / samayal kurippu /cooking super ideas
டிப்ஸ் 5: நல்லெண்ணெய் வாங்கி பயன்படுத்தும் போது ஒரு இரண்டு மூன்று நாட்களிலேயே அதில் உள்ள வாசனை போய்விடும். அப்படி வாசனை போகாமல் இருக்க சிறிய அளவிலான வெல்லம் எடுத்து அந்த எண்ணெயில் போட்டு மூடி வைத்துக் கொண்டால் வாசனை அப்படியே இருக்கும்.
டிப்ஸ் 6: பிரிட்ஜ் திறக்கும் போது ஒரு வாசனை வரும் அப்படி வராமல் இருப்பதற்கு ஒரு சின்ன கப்பில் அரிசி ஒரு ஸ்பூன் சேர்த்து அதில் ஏதாவது ஒரு எஸ்சென்ஸ் சேர்த்து மேலே அதை ஒரு துணி அல்லது நெட் துணி போட்டு கட்டி பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம் வாசனையாக இருக்கும்.
டிப்ஸ் 7: நிறைய ஹேண்ட்பேக் வைத்திருப்பவர்கள் அதை வைக்க இடம் இல்லை என்று புலம்புவார்கள். ஆனால் இனி கவலை வேண்டாம். ஒரு ஆங்கர் எடுத்து அதில் ஹேண்ட்பேங் மாற்றி மாற்றி இரண்டு பக்கமும் மாட்டி வைக்கலாம்.
டிப்ஸ் 8: தங்க தோடு போடும்போது அதன் திருகாணி நம்மை அறியாமலேயே லூசாகிவிடும். அப்படி லூசாகி வராமல் இருக்க பூண்டில் அந்தத் திருகாணியை குத்தி சாறு அதில் ஒட்டுமாறு செய்து பின்னர் எடுத்து அதை காதில் போட்டுவிட்டால் பிசுபிசுப்புடன் சேர்த்து ஒட்டிக் கொள்ளும் திருகாணி லூசு ஆகி வராது.
டிப்ஸ் 9: பாட்டிலில் ஒட்டி வரும் ஸ்டிக்கர்களை பிரிக்க ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீர் சேர்த்து அதில் இந்த பாட்டிலை போட்டு ஒரு பத்து நிமிடம் விட்டு அப்படியே மூடி போட்டு வைத்துவிடவும். பின்னர் எடுத்து அந்த ஸ்டிக்கரை பிரித்தால் வந்துவிடும்.
இந்த தகவல்கள் அனைத்தும் பிஸ்மி சமையல் என்ற பூடியூப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது.