உங்களுக்கு திருமணமா? பியூட்டி பார்லர் தேவையில்லை.. மேக்கப் வேண்டாம்.. நீங்க பளபளன்னு ஜொலிக்க இதை மட்டும் செய்யுங்க!

சரியான உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம், வருங்கால மணப்பெண்கள், முக்கிய நாளில் தங்களின் சிறந்த தோற்றத்தை உணர முடியும்.

ஊட்டச்சத்து நிபுணர் என்மாமி அகர்வால் மணப்பெண்கள்( அனைவருக்கும் பொருந்தும்) சேர்த்துக்கொள்ளக்கூடிய சில முக்கியமான உணவுப் பழக்கங்களைப் பரிந்துரைக்கிறார்.

திருமணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான தருணம். மணப்பெண்களைப் பொறுத்தவரை, குடும்பம் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஒரு பெரிய மாற்றத்திற்குத் தயாராவது.

எனவே, திருமணத்திற்கு முந்தைய நாட்களில் அவர்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதனால் தங்களை கவனித்துக் கொள்ள மறந்து விடுகிறார்கள். இருப்பினும், சரியான உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம், வருங்கால மணப்பெண்கள், முக்கிய நாளில் தங்களின் சிறந்த தோற்றத்தை உணர முடியும்.

இன்ஸ்டாகிராம் பதிவில், அகர்வால் சில விரைவான குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

கலோரி நிறைந்த குக்கீகளை சாப்பிடுவதற்குப் பதிலாக, எப்பொழுதெல்லாம் சாப்பிட தோன்றுகிறதோ அப்போது கொட்டைகளை (Nuts) சாப்பிடுங்கள்.

நாம் செய்யும் பொதுவான தவறு, போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது; உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் குடிக்கவும்.

ஒவ்வொரு நாளும் உங்கள் உணவில் ஒரு கிளாஸ் காய்கறி சாறு சேர்த்து, சாப்பிடுங்கள். உங்கள் சருமம் பளபளக்க சில கேரட், பீட்ரூட் மற்றும் தக்காளியை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் டயட்டில் ஒரு கிளாஸ் சியா விதை தண்ணீரைச் சேர்க்கவும். இது உங்களுக்கு ஊட்டமளித்து உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்றும்.

தினமும் ஒரு கிண்ணம் பப்பாளியை சாப்பிடுங்கள், ஏனெனில் இது செரிமானத்திற்கு சிறந்தது.

கடைசியாக, தயிர் சாப்பிடுங்கள். இது உங்கள் குடலுக்கு சிறந்தது மற்றும் கால்சியம் மற்றும் புரதத்துடன் ஏற்றப்படுகிறது. இது உங்கள் எடையை பராமரிக்கவும் உதவுகிறது.

இதை மணப்பெண்கள் மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. உங்கள் சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற நீங்களும் சாப்பிடலாம்!

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Simple dietary tips for brides to be to look and feel their best on wedding day

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com