பச்சைப் பட்டாணியில் கெமிக்கல்? கண்டுபிடிக்க ஒரு டம்ளர் தண்ணீர் போதும்!

இந்நிலையில், FSSAI (உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) பச்சைப் பட்டாணியில் நிற கலப்படத்தைச் சோதிக்கும் எளிய முறையை வெளியிட்டுள்ளன.

சுவை மிகுந்த பச்சைப் பட்டாணியில், பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அதில் பைட்டோநியூட்ரியண்ட்ஸ், லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் மற்றும் வைட்டமின்கள் (ஏ, பி, சி, ஈ மற்றும் கே) ஆகியவை உள்ளன. இதுமட்டுமின்றி, அவை நார்ச்சத்து நிறைந்தவை, குறைந்த கொழுப்பு மற்றும் நோ கொலஸ்ட்ரால் ஆகும்.

இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த பட்டாணியில், சில நேரங்களில் செயற்கை நிறத்துடன் கலப்படம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், FSSAI (உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) பச்சைப் பட்டாணியில் நிற கலப்படத்தைச் சோதிக்கும் எளிய முறையை வெளியிட்டுள்ளன.

step 1: கண்ணாடி கிளாலில் சில பச்சைப் பட்டாணிகளை வைக்க வேண்டும்

step 2: அத்துடன் நீரைக் கலந்து, கலக்க வேண்டும். சுமார் அரை மணி நேரம் வெயிட் செய்ய வேண்டும்

step 3: கலப்படம் இல்லாத பச்சைப் பட்டாணி எந்த நீரையும் வெளியிடாது. ஆனால், அதே சமயம், கலப்படமான பச்சைப் பட்டாணியால், தண்ணீர் பச்சையாக மாறிவிடும்.

இந்த செயல்முறையை, அடுத்த டைம் பச்சைப் பட்டாணி வாங்கும்போது தவறாமல் முயற்சித்து பாருங்கள்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Simple experiment to test colour adulteration in green peas

Next Story
நான் டயட் பின்பற்றுவதற்கு இதுதான் காரணம் – பிக் பாஸ் அனிதா சம்பத் வைரல் வீடியோ!Bigg Boss fame Anitha Sampath Diet Viral Video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X