/indian-express-tamil/media/media_files/2025/02/12/uNlYzk9kjBuRzmOjPpxe.jpg)
பலரும் வேலையின் நிமித்தமாக நேரம் காலம் பார்க்காமல் வெளியே செல்ல வேண்டிய சூழல் இருக்கும். மழைக்காலத்தை விட வெயிலின் தாக்கத்தில் அதிகமாக வெளியே செல்லும் போது பல்வேறு தாக்கங்களை உண்டாக்கும். அது போன்ற நேரத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க சத்தான பழங்கள், ஜூஸ் போன்றவற்றை அருந்துவோம்.
ஆனால், சருமமும் இதில் கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக, முகம் முழுவதும் பலருக்கு கருமை நிறத்தில் மாறிவிடும். இதனை போக்குவதற்கு பியூட்டி பார்லருக்கு சென்று ஆயிரக்கணக்காக பணம் செலவளிக்கவும் எல்லோராலும் முடியாது. அப்படிப்பட்டவர்களுக்காகவே அருமையான ஹோம்மேட் ஃபேஸ்பேக் எப்படி தயாரிப்பது என இதில் பார்க்கலாம்.
ஒரு சிறிய பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் கெட்டியான தயிர் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்றாக பசை பதத்திற்கு கலக்க வேண்டும். இவ்வாறு கலக்கிய பின்னர், இந்த ஃபேஸ்பேக்கை முகம் முழுவதும் தேய்த்துக் கொள்ளலாம். உங்கள் சருமம் வறட்சியாக இருந்தால், முகத்தில் சிறிது ரோஸ் வாட்டர் தேய்த்து பின்னர், இந்த ஃபேஸ்பேக்கை உபயோகிக்கலாம்.
இவ்வாறு முகத்தில் தேய்த்த பின்னர், சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இந்த ஃபேஸ்பேக் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி, சருமத்தை பொலிவாக்கும். இதில் இரசாயனங்கள் எதுவும் சேர்க்காததால், ஒவ்வாமை ஏற்படும் என்ற சந்தேகமும் தேவையில்லை.
நன்றி - Eyekiller Tamil Beauty Tips Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.