உணவைச் சாப்பிடாமல் தவிர்ப்பது எந்த அளவுக்கு உடல்நலத்தைப் பாதிக்குமோ, அதே அளவுக்கு நேரம் தாழ்த்தி உண்ணும் உணவும் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும். எந்த உணவை, எந்த நேரத்தில், எப்போது சாப்பிடவேண்டும்... பார்க்கலாமா?
`மூன்று வேளை நன்றாகச் சாப்பிட்டால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்’ என்பதை சிறுவயதிலிருந்து கேட்டிருக்கிறோம். ஆனால், `ஒரு நாளைக்கு ஐந்து வேளையாக உணவைப் பிரித்துச் சாப்பிடுவதே சிறந்தது’ என்கிறார்கள் உணவியலாளர்கள். பொதுவாகவே நமக்கு பிடித்த உணவுகளை நாம் எந்த வேளை கொடுத்தாலுய்ம் உடனே சப்பிட ரெடியாகி விடுவோம்.
பூரி, உருளைக்கிழங்கு, பரோட்டோ, பிரியாணி, போன்ற உணவுகள் பெரும்பாலும் பலருக்கும் பிடித்தமான உணவு இதை மூன்று வேளை கொடுத்தாலும் சாப்பிட ஒகே சொல்லி விடுவார்கள். ஆனால் உண்மையில் சில உணவுகளை கண்டிப்பாக காலை மற்றும் இரவு நேரங்களில் உண்பதை தவிர்க்க வேண்டும். இதனால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.
தோசை - சட்டினி - சாம்பார், பூரி - உருளைக்கிழங்கு குருமா, பொங்கல், சப்பாத்தி - சப்ஜி, காய்கறிகள் சேர்த்த உப்புமா, புட்டு - கொண்டைக் கடலை, சத்துமாவுக் கஞ்சி மற்றும் பழங்கள் போன்றவை காலை உணவுக்கு ஏற்றவை. மதிய உணவில் வெரைட்டி ரைஸ் எனப்படும் புளியோதரை, தக்காளி சாதம், லெமன் சாதம்.அனைத்து வகை கீரைகளையும், பருப்புகளையும்,பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்களை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இரவு உணவுக்கு இட்லி, சாம்பார், தோசை, சப்பாத்தி, உப்புமா, கோதுமை உணவுகள், பருப்பு வகைகள், ராகி, கம்பு, தேன், பால் போன்றவற்றை தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகச் சாப்பிட வேண்டும். குறிப்பாக இரவில் பூரி உருளைக்கிழங்கை சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் பூரியில் இருக்கு எண்ணெய் இரவு நேரத்தில் சீரன சக்தியை குறைத்து தொப்பையை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு.