Advertisment

லெமனுடன் இந்த ஒரு பொருள்... பொங்கலுக்கு முன் பூஜை பாத்திரங்கள் பளபளக்கும்!

பூஜை பாத்திரங்களை எப்படி சுலபமாக சுத்தம் செய்து அவற்றை புதிது போன்று மாற்றுவது என்ற பயனுள்ள குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். இதற்காக எலுமிச்சை மற்றும் விபூதி இருந்தால் போதுமானது.

author-image
WebDesk
New Update
Pooja equipment

பொங்கலை முன்னிட்டு பூஜை பொருட்களை சுத்தப்படுத்தி வைக்கும் பணியை பலரும் மேற்கொண்டு வருவார்கள். அந்த வகையில் அவர்களின் பணியை எப்படி எளிமையாக்குவது என தற்போது பார்க்கலாம்.

Advertisment

முதலில் பூஜை பாத்திரங்களில் இருக்கும் மஞ்சள், எண்ணெய், குங்குமம் போன்றவற்றை கழுவி எடுக்க வேண்டும். இதற்கு வழக்கமாக பாத்திரம் கழுவ பயன்படும் சோப்பை உபயோகிக்கலாம்.

இதையடுத்து இரண்டு பொருட்களை பயன்படுத்தி பூஜை பாத்திரங்களை புதிதாக மாற்றலாம். இதற்காக 2 எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் இருந்து சாறு பிழிந்து விட்டு, அதனுடன் சபினா பொடியை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதில் தண்ணீர் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இதைக் கொண்டு பூஜை பாத்திரங்களை தேய்த்து கழுவலாம். ஏற்கனவே, ஒரு முறை கழுவியதால் அதிகமாக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரணமாக கழுவி எடுத்தாலே போதும். 

Advertisment
Advertisement

இவ்வாறு பூஜை பாத்திரங்களை கழுவினால் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு அவற்றை கழுவ வேண்டும் என்ற தேவை இல்லை. இப்போது கழுவி எடுத்த பூஜை பாத்திரங்களை காட்டன் துணி கொண்டு துடைக்க வேண்டும். இறுதியாக, இந்த பூஜை பாத்திரங்களில் லேசாக விபூதி தடவி விட வேண்டும். இப்படி செய்தால் பூஜை பாத்திரங்கள் புதிது போல் காட்சியளுக்கும்.

Pongal Habits that can make difference in your lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment