இதை மட்டும் செய்தால் போதும்.. 3 மாதங்கள் வரை பால் கெடாமல் புதிது போல இருக்கும்!

பால் போன்ற அழுகக்கூடிய பொருட்களின் ஆயுளை அதிகரிக்க பல வழிகள் உள்ளன. இந்த செயல்முறையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.

பாலை எவ்வளவு காலம் சேமிக்கலாம் தெரியுமா? பால் பொருட்கள் 2-3 நாட்களுக்கு வரையறுக்கப்பட்ட ஆயுட்காலம் கொண்டவை. ஆனால் இந்த புத்திசாலித்தனமான ஹேக்கைப் பயன்படுத்துவது புத்துணர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ளவும், பாலின் ஆயுளை 3 மாதங்கள் வரை அதிகரிக்கவும் உதவும். இந்த செயல்முறையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.

நிபுணர்கள் என்ன பரிந்துரைக்கிறார்கள்?

பால் போன்ற அழுகக்கூடிய பொருட்களின் ஆயுளை அதிகரிக்க பல வழிகள் உள்ளன. ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, சமையல் அல்லது பேக்கிங் தேவைக்காக’ பாலை தக்கவைத்து சேமிப்பதற்கான ஒரு சிறந்த வழி, அவற்றை உகந்த வெப்பநிலையில் உறைய வைப்பதாகும்.

பால் என்பது கெட்டுப்போகக்கூடியது, ஆனால் அது உறைந்துவிடும். உறைய வைக்கும் பால்’ பாலின் அமைப்புக் கூறுகளை மாற்றும். உறைந்த மற்றும் உருகிய பாலைப் பச்சையாகக் குடிப்பதை விட அதை சமையலுக்கு பயன்படுத்துவது சிறந்தது, குறிப்பாக உறைந்திருந்தால்,

அனைத்து வகையான பாலையும் உறைய வைக்க முடியுமா?

முழு பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் இரண்டையும் எளிதில் உறைய வைக்கலாம். இருப்பினும் ஸ்கீம்ட் பால் போன்ற குறைந்த கொழுப்புள்ள பாலுடன் ஒப்பிடும் போது, கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பால் உருகும் போது அதிகமாக பிரியும்.

எனவே, உறைந்த பாலை சமைக்க அல்லது பேக்கிங்கிற்கு பயன்படுத்துவதற்கு முன்பு குலுக்கி விடுவது நல்லது. 6 மாதங்கள் வரை பாலை உறைய வைத்து சேமிப்பது பாதுகாப்பானது. ஆனால் நீங்கள் மென்மையான அமைப்பையும் சுவையையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், உறைந்த பாலை 3 மாதங்களுக்குள் உட்கொள்வது அல்லது பயன்படுத்துவது நல்லது.

பாலை உறைய வைத்து பாதுகாப்பது எப்படி

முதலில், காற்று புகாத கண்டெய்னரில் பாலை ஊற்றவும், அதை நீங்கள் மாதங்களுக்கு உறைய வைக்கலாம்.

கண்டெய்னரில் பாலை நிரம்பி வழியும் வரை ஊற்றக்கூடாது. மாறாக பாலை விரிவடைய அனுமதித்து, கண்டெய்னரில் சிறிது இடைவெளி விடவும். பின்னர் இறுக்கமாக மூடி வைக்கவும். பாலில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க, அறை வெப்பநிலையில் அல்லாமல், பிரிட்ஜில் ஒரு இரவு முழுவதும் உருக வைப்பது நல்லது. குறைந்தபட்சம் 41 டிகிரி பாரன்ஹீட்டைப் பராமரிப்பது அவசியம், அதன் பிறகு எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் அதை உறைய வைக்கலாம்.

பனீர் போல பால் சிறிய பகுதிகளை உறையவைத்து, அவ்வப்போது அவற்றைப் பயன்படுத்துவதற்கான மற்றொரு வழி; ஐஸ் கட்டிகளில் பாலை ஊற்றுவது. அவை கட்டியாக மாறியவுடன், அவற்றை வெளியே எடுத்து பயன்படுத்தவும். பிறகு ஜிப் லாக் பாக்கெட்டில் வைத்து மீண்டும் உறைய வைக்கவும்.

இது நீரின் தேவையற்ற விரிவாக்கம் மற்றும் பால் படிகமாக்கல் காரணமாக கண்டெய்னரை உடைப்பிலிருந்து காப்பாற்றுகிறது.

மனதில் கொள்ள வேண்டிய குறிப்புகள்

உங்கள் மளிகைப் பட்டியலில் கடைசியாக பால் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

புதிய பாலை பயன்படுத்துங்கள் மற்றும் காலாவதி தேதியை நெருங்கும் பாலை உறைய வைக்காதீர்கள்.

வெப்பநிலையை பராமரிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Simple hack to preserve milk up to 3 months

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com