வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சிகள், பல்லி, கொசு தொல்லைகளை எப்படி போக்குவது என்று நினைத்தாலே பலருக்கு தலை வலி இருக்கும். இதற்கான மிக எளிய தீர்வு என்னவென்று இதில் பார்க்கலாம்.
இதற்கு முதலில் ஒரு காய்ச்சல் மாத்திரியை நன்றாக இடித்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இத்துடன் 10 மிளகையும் சேர்த்து இடித்து பொடியாக்கி சேர்க்க வேண்டும். இதை ஒரு கிண்ணத்தில் போட்டு அரை மூடி டெட்டால், ஒரு கிராம் காபி பொடி, முக்கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இந்தக் கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கரப்பான் பூச்சிகள், பல்லிகள் காணப்படும் இடங்களில் தெளிக்க வேண்டும். ஸ்ப்ரே பாட்டில் இல்லையென்றால், பழைய பிளாஸ்டி பாட்டிலின் மூடியில் துவாரமிட்டு அதனை ஸ்ப்ரே பாட்டில் போன்று பயன்படுத்தலாம். மேலும், மீதமிருக்கும் இந்தக் கலவையில் டிஷ்யூ பேப்பர் அல்லது பேப்பரை சிறிதாக கிழித்து நனைக்க வேண்டும். இதனை சிறு துண்டாக உருட்டி கரப்பான் பூச்சி இருக்கும் இடங்களில் வைத்தால் இதன் வாசனைக்கு பூச்சிகள் வராது.
கொசு தொல்லையை போக்குவதற்கு ஒரு வெங்காயத்தின் மேற்பகுதியை பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். கீழ்ப்புறத்தையும் தரையில் வைப்பதற்கு ஏதுவாக வெட்டிக் கொள்ளலாம். பின்னர், வெங்காயத்தின் மேற்புறத்தில் நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட், இடித்து பொடியாக்கிய 4 கிராம்புகள், மூன்று கற்பூரம் போட்டு அதனை பற்ற வைக்க வேண்டும். இதன் வாசனைக்கு கொசுக்கள் வராது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“