சின்ன வெங்காயத்தை முட்டையுடன் சேர்த்து இப்படி யூஸ் பண்ணுங்க; நீங்களே செய்யலாம் சிம்பிளான ஹேர்பேக்!
சின்ன வெங்காயம் மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை கொண்டு நம் தலை முடிக்கு தேவையான ஹேர்பேக் எப்படி தயாரிப்பது என இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இது முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும்.
இன்றைய சூழலில் ஆண், பெண் என அனைத்து பாலினத்தவருக்கும் பொதுவாக இருக்கும் பிரச்சனை என்னவென்றால் முடி உதிர்வு தான். அந்த அளவிற்கு வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றம் ஆகியவை முடி உதிர்வு பிரச்சனையை ஏற்படுத்துகின்றன.
Advertisment
முடி தானே என்று இதனை சாதாரணமாகவும் கடந்து விட முடியாது. அழகு சார்ந்தது மட்டுமல்லாமல், புரதச் சத்து குறைபாடு, பயோட்டின் குறைபாடு போன்ற பிரச்சனைகளாலும் முடி உதிர்வு ஏற்படும். அதனால், முடியை சீராக பராமரிப்பது என்பது ஆரோக்கியத்தை பாதுகாப்பதாகும். அந்த வகையில் முடி உதிர்வு பிரச்சனையை போக்குவதற்கு நாமே ஹேர்பேக் ஒன்றை தயாரித்துக் கொள்ளலாம்.
நம் வீட்டில் இருக்கும் சிம்பிளான இரண்டு பொருட்கள் வைத்து சூப்பரான ஹேர்பேக் தயாரிக்க முடியும். ஒரு முட்டையை உடைத்து அதில் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து, சில சின்ன வெங்காயங்களை எடுத்து அவற்றை அரைத்து சாறு மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது, சின்ன வெங்காயத்தின் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு ஆகிய இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்படி செய்தால் நமக்கான ஹேர்பேக் தயாராகி விடும். இதனை தலையில் தேய்த்து விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இப்படி செய்தால் முடி உதிர்வு பிரச்சனை குறையத் தொடங்கும்.
Advertisment
Advertisements
ஆனால், இந்த ஹேர்பேக்கை வாரத்திற்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தினால் போதுமானதாக இருக்கும். ஏனெனில், இவை சருமத்தை வறட்சியாக்கக் கூடும்.
நன்றி - Spicy Samayals Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.