Simple Adai Dosai recipe Tamil : எப்போதும் ஒரே போன்ற தோசையைச் செய்து சலித்துப்போனவர்களுக்கு, நிச்சயம் வித்தியாசம் இப்போது அவசியம். அதிலும் சுவையான அடை தோசை நிச்சயம் உங்களை ஏமாற்றிவிடாது. மெல்லிய, மிருதுவான அமைப்பைக் கொண்டிருக்கும் இந்த அடை தோசை செய்வதும் எளிது. மேலும், எளிதில் ஜீரணமாகும் உணவு வகையும்கூட. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பயிறு வகைகளாலான அடை தோசையைச் சுவைத்து மகிழலாம்.
Simple Healthy Golden Roast Adai Dosai
தேவையான பொருட்கள்
வேகவைத்த அரிசி - 1 கப்
உளுத்தம்பருப்பு - ½ கப்
துவரம்பருப்பு - ¼ கப்
கடலைப்பருப்பு - ¼ கப்
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
உலர்ந்த சிவப்பு மிளகாய் - 4-5 (மிளகாயின் காரத்தைப் பொறுத்து அளவை தேர்ந்தெடுக்கலாம்)
கறிவேப்பிலை கொத்து - 1
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை
அரிசி, பயறு மற்றும் வெந்தய விதைகளைக் கழுவி, ஒன்றாகச் சேர்த்து சுமார் 4 கப் தண்ணீர் மற்றும் அதனோடு மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 5-6 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். இது தோசை மாவைவிட சற்று கொரகொரப்பாக இருக்கும். அரைத்து முடித்தது, அதனைப் புளிக்க அனுமதிக்கவும். அரைத்த மாவு அரை அங்குலம் உயர வேண்டும். இந்த கட்டத்தில், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் கலந்து பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். இல்லையென்றால் மாவு மிகவும் புளித்துவிடும்.
Breakfast Recipe Tamil
அடை தோசை செய்ய விரும்பும்போது, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மாவை வெளியே எடுத்து, அறை வெப்பநிலை வரும் வரை காத்திருக்கவும். பின்னர், தோசை தவாவை சூடாக்கி, தோசை ஊற்றுவதுபோல மாவைப் பரப்பி, சிறிது எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். தோசையின் முதல் பக்கத்திற்கு அடுப்பின் அளவு அதிகமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விளிம்புகள் பழுப்பு நிறமாக மாறும். அப்போது அடுப்பின் அளவைக் குறைத்து தோசையைத் திருப்பிப் போடுங்கள். சுமார் ஒரு நிமிடம் கழித்து, உங்கள் மிருதுவான, தங்க, சுவையான அடை தோசை தயார்.
ஊறுகாய் அல்லது சட்னி அல்லது சாம்பாருடன் சூடாகப் பரிமாறவும். அல்லது அப்படியே வைத்திருங்கள். பலர் வெள்ளை வெண்ணெய் மற்றும் வெல்லத்துடன் சேர்த்தும் சாப்பிடுவார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"