/indian-express-tamil/media/media_files/2025/10/01/download-69-2025-10-01-11-23-59.jpg)
இன்று பல பெண்கள் தங்களுடைய முகத்திற்கு கொடுக்கக்கூடிய அதே முக்கியத்துவத்தை தங்களுடைய கால்களுக்கும் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். பெடிக்யூர், மெனிக்யூர் போன்ற கால்களின் அழகை மேம்படுத்தக்கூடிய விஷயங்களில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பலர் சந்திக்க கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாக குதிகால் வெடிப்பு அமைகிறது.
கால்களை சுற்றி இருக்கும் தோலில் விரிசல்கள் ஏற்பட்டு வறண்டு காணப்படுவது பாத வெடிப்பு எனப்படுகிறது. இது நமக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அசௌகரியம், வலி அல்லது மோசமான சூழ்நிலைகளில் இரத்த கசிவை கூட ஏற்படுத்தலாம். ஆகவே பாத வலிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதிலிருந்து விடுபடுவதற்கு உதவும் குறிப்புகளையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பாத வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
பாத வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் உலர்ந்த தோல் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கால்களில் உள்ள தோல் வறண்டதாக மாறி அதன் நெகிழ்வு தன்மையை இழக்கும் பொழுது பாத வெடிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக குளித்த பிறகு உங்களுடைய கால்களுக்கு நீங்கள் போதுமான மாய்சரைசேஷன் வழங்காததால் பாத வெடிப்பு உண்டாகிறது.
வயது: நமக்கு வயதாக வயதாக நமது சருமத்தில் உள்ள ஈரப்பதம் மற்றும் அதன் நெகிழ்வுத் தன்மை இழக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய கால்களை ஃபுட் கிரீம் பயன்படுத்தி மாய்சரைஸ் செய்வது அவசியம். இல்லை எனில் உங்களுக்கு பாத வெடிப்புகள் ஏற்படலாம்.
நீண்ட நேரம் நிற்பது: ஆசிரியப் பணி அல்லது துணி கடைகளில் வேலை பார்ப்பவர்கள் நீண்ட நேரத்திற்கு நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இது கால்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி அதனால் பாத வெடிப்பை ஏற்படுத்துகிறது. நீண்ட தூரம் நடப்பதனாலும் கால்களில் அழுத்தம் உண்டாகி பாத வெடிப்பு ஏற்படலாம்.
சரியான காலணிகள் அணியாமல் இருப்பது குதிகால் மட்டுமல்லாமல் உங்கள் கால்களுக்கு பொருத்தமில்லாத ஷூக்கள் அல்லது செருப்புகளை அணியும் பொழுது அது உங்களின் கால்களில் அதிக அளவு அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் குதிகால்கள் அழுந்தி அவற்றில் விரிசல்கள் ஏற்படுகிறது. டயாபடீஸ், தைராய்டு பிரச்சனைகள் மற்றும் சொரியாசிஸ், எக்ஸிமா போன்ற சரும நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களும் பாத வெடிப்புகளால் அவதிப்படுகின்றனர்.
இதற்கான ஒரு சிம்பிள் தீர்வு!
முதலில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் கொஞ்சம் மெழுகு சேர்க்க வேண்டும். இப்போது இரண்டையும் ஒன்றாக கலந்து லேசாக மெழுகு கரையும் வரை சூடு படுத்த வேண்டும். அதன் பிறகு அதை நன்கு ஆற வைக்க வேண்டும். அது ஆரிய பின் ஒரு நல்ல கிரீம் பதத்தில் இருக்கும்.
அதை உங்கள் பாதத்தில் அப்ளை செய்வதற்கு முன்பு உங்கள் கால்களை கொஞ்சம் கல் உப்பு மற்றும் எலுமிச்சை சேர்த்த சுசு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
அதன் பிறகு கால்களை நன்கு துடைத்துவிட்டு பிறகு இந்த கிரீம் போட்டால் கண்டிப்பாக வெடிப்பு இருந்த இடமே தெரியாமல் போய்விடும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.