வெயிலின் தாக்கத்தால் முகம் வறட்சியாக இருக்கிறதா? கவலையே வேண்டாம்; இந்த சிம்பிள் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க!
வெயிலின் தாக்கத்தால் முகம் வறட்சியாக காணப்படுபவர்கள் பாசிபயிறு மூலம் ஹோம்மேட் ஃபேஸ்பேக் தயாரித்து பயன்படுத்தலாம். இவை சருமத்தை குளிர்ச்சியாக்கி முகம் வறண்டு போலாமல் தடுக்கும்.
வெயிலின் தாக்கத்தால் முகம் வறட்சியாக காணப்படுபவர்கள் பாசிபயிறு மூலம் ஹோம்மேட் ஃபேஸ்பேக் தயாரித்து பயன்படுத்தலாம். இவை சருமத்தை குளிர்ச்சியாக்கி முகம் வறண்டு போலாமல் தடுக்கும்.
தற்போது பல ஊர்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. பொதுவாக கோடை காலத்தில் தான் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கும். ஆனால், இப்போது காலநிலை மாற்றத்தால் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, வெயில் கடுமையாக இருக்கிறது.
Advertisment
இந்த சூழலில் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உணவாக எடுத்து உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இதேபோல், சருமத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகிறது.
ஏனெனில், வெயிலினால் கடுமையாக பாதிக்கப்படுவது சருமம் தான். அதன்படி, ஒவ்வொருவரும் சரும பராமரிப்பு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஆனால், கோடை காலம் முழுவதும் அடிக்கடி பியூட்டி பார்லர் செல்வதற்கும் எல்லோராலும் முடியாது. இதற்காக ஃபேஸ் க்ரீம், சீரம், போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம் என்று சிலர் கருதுவது உண்டு.
ஆனால், இது போன்று கடைகளில் இருந்து வாங்கும் பொருட்களில் அதிகப்படியான இரசாயனங்கள் கலந்திருப்பதால் அவை ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில், நம் முகத்திற்கு தேவையான ஃபேஸ்பேக்கை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.
Advertisment
Advertisements
இதற்காக, நம் முகத்திற்கு தேவையான அளவு பாசிபயிறை எடுத்து சிறிதளவு பாலுடன் சேர்த்து பசை பதத்திற்கு கலந்து கொள்ளலாம். இவ்வாறு செய்தால் சிம்பிளான ஃபேஸ் பேக் தயாராகி விடும். இதனை நம் முகத்தில் தடவி விட்டு சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் கழுவி விடலாம்.
இப்படி தொடர்ச்சியாக செய்தால் நம் முகம் வறட்சியாவது கட்டுப்படுத்தப்படும். மேலும், இதில் இரசாயனங்கள் எதுவும் சேர்க்காமல் நாமே தயாரிப்பதால், ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் இல்லை.
நன்றி - Mullai Health and Beauty Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.