தேன் கூட பப்பாளியை சேர்த்து இப்படி யூஸ் பண்ணுங்க; சருமத்தை பொலிவாக மாற்ற சிம்பிளான வழி
பப்பாளி, தேன் போன்ற பொருட்களை பயன்படுத்தி சரும பராமரிப்பு முறையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இது உங்கள் முகத்தை பொலிவாக மாற்றும்.
பப்பாளி, தேன் போன்ற பொருட்களை பயன்படுத்தி சரும பராமரிப்பு முறையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இது உங்கள் முகத்தை பொலிவாக மாற்றும்.
சீரான சரும பராமரிப்பு முறையை பின்பற்றுவதன் மூலம் நீண்ட நாட்களுக்கு நம் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அவ்வாறு செய்யும் போது நம் முகம் பார்ப்பதற்கு பொலிவாகவும், மிருதுவாகவும் காட்சி அளிக்கும்.
Advertisment
குறிப்பாக, சரும பராமரிப்பு முறையில் மூன்று படிநிலைகள் இருப்பதாக அழகுக் கலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, க்ளென்சிங், ஸ்க்ரப்பிங் மற்றும் ஃபேஸ் பேக் என மூன்று முறைகளையும் கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவை அனைத்தையும் பின்பற்றும் போது தான் முழுமையான பலன் கிடைக்கும்.
இதற்காக கடைகளில் இருந்து தனித்தனியாக பொருட்களை வாங்கி பயன்படுத்தும் பழக்கம் ஏராளமானவர்களிடம் காணப்படுகிறது. எனினும், இது போன்ற பொருட்களில் இரசாயனங்கள் கலந்திருப்பதால் அவை சருமத்தில் ஏதேனும் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று சிலர் தயங்குவார்கள்.
அதனடிப்படையில், வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்களை கொண்டு சரும பராமரிப்பு முறையை பின்பற்றலாம். இதற்காக சிறிதளவு பால் எடுத்துக் கொள்ளலாம். கொஞ்சமாக காட்டனை எடுத்து இந்தப் பாலில் நனைத்து, முகத்தை நன்றாக துடைக்க வேண்டும். இப்படி செய்யும் போது, முகத்தில் இருக்கும் அழுக்குகள் முற்றிலும் நீங்கி விடும்.
Advertisment
Advertisements
அடுத்ததாக, நம் முகத்திற்கு தேவையான அளவு பப்பாளியை அரைத்து, அத்துடன் கொஞ்சமாக சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும். இந்த ஸ்க்ரப்பரை முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து துடைத்து எடுக்கலாம். இப்படி செய்தால் டெட் செல்கள் அனைத்தும் அகன்று விடும்.
இறுதியாக, மீதமிருக்கும் பப்பாளி விழுதுடன் தேன் சேர்த்தால் ஃபேஸ்பேக் தயாராகி விடும். இந்த ஃபேஸ்பேக்கை முகத்தில் தடவிய பின்னர், சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இது நம் முகத்தை பொலிவாகவும், மிருதுவாகவும் மாற்றும். இந்த சரும பராமரிப்பு முறையை நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து செய்யும் போது அதற்கான பலன் கிடைக்கும்.
நன்றி - Lavanya Selvakumar Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.