தர்பூசணி வெட்டும்போது இதை ஃபாலோ பண்ணுங்க… ஒரே நிமிடத்தில் விதைகள் இல்லா துண்டுகள் ரெடி!
தர்பூசணி பழத்தை சாப்பிடும்போது விதைகளை எடுக்க முடியாமல் சிரமப்படாதீர்கள், தர்பூசணியை வெட்டும்போது இந்த ஐடியாவை ஃபாலோ பண்ணி நறுக்கினால் ஒரு நிமிடத்தில் விதையில்லாமல் தர்பூசணி துண்டுகள் ரெடி, அப்படியே சாப்பிடுங்கள்.
கோடைக்காலத்தில் மக்களின் தண்ணீர் தாகத்தையும் வெப்பத்தையும் தனிப்பது தர்பூசணிப் பழம்தான். இந்த தர்பூசணி பழத்தை சாப்பிடும்போது பழத்தில் இருக்கும் விதைகளை நீக்க பலரும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்காகவே தர்பூசணியை விதைகள் இல்லாமல் துண்டுகளாக வெட்ட இந்த ஐடியாவை ஃபாலோ பண்ணுங்க…
Advertisment
தர்பூசணி என்கிற தண்ணீர் பழத்தில் நிறைந்துள்ள நீர்ச்சத்து இனிப்பு சுவை வெயிலின் வெப்பத்தில் சோர்ந்து போயுள்ளவர்களின் தாகத்தை தனிப்பதோடு அவர்களை உடனடியாக உற்சாகப்படுத்துகின்றன. அதனால்தான், கோடைக்காலத்தில் பலரும் தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால், தர்பூசணி பழத்தில் உள்ள விதையை எடுத்துவிட்டு சாப்பிடுவதில் பலரும் சிரமப்படுகின்றனர். தர்பூசணி பழத்தை வெட்டும்போது விதைகளை நீக்கவும் சிலர் சிரமப்படுகின்றனர். அப்படி தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை எடுக்க சிரமப்படுபவர்களுக்காக தர்பூசணி பழத்தை விதைகளை எளிதாக அகற்றி விதையில்லா தர்பூசணி பழத்தை சாப்பிட இங்கே ஒரு சூப்பரான ஐடியா தருகிறோம்.
நன்றாக பழுத்த தர்பூசணி பழத்தை வாங்கிக்கொள்ளுங்கள். தர்பூசணி பழத்தின் ஏதாவது ஒரு பகுதியில் வெளிரிப்போய் இருக்கும். அதுதான் ஒரு தர்பூசணி பழம் நன்றாக பழுத்துள்ளது என்பதற்கான அடையாளம். அப்படி நன்றாக பழுத்த தர்பூசணியை வாங்கி வந்து விதையில்லாமல் வெட்ட வேண்டும் என்றால், முதலில், அந்த தர்பூசணி பழத்தை குறுக்கில் இரண்டு பாதியாக வெட்டுங்கள்.
ஒரு பாதியை எடுத்து அடிப்பகுதியில் ஒரு சிறிய பகுதியை வெட்டுங்கள். பிறகு, தர்பூசணியை ஒரு பெரிய தட்டில் கவிழ்த்து வைத்து மேல் தோலை சிவப்பு பகுதி சேதம் அடையாமல் சீவிக்கொள்ளுங்கள். பிறகு, 2 செ.மீ அளவு தடிமனில் வட்டவட்டமாக தர்பூசணியை நறுக்கிக்கொள்ளுங்கள். பிறகு, வட்டமாக நறுக்கிய தர்பூசணியில் இருந்து எளிதாக தர்பூசணி விதையை நீங்குங்கள். பிறகு, வட்ட வட்டமாக நறுக்கிய தர்பூசணியை வரிசையாக வைத்து மொத்தமாக துண்டுகளாக நறுக்கி விதையில்லாமல் சுவையான தர்பூசணியை சாப்பிடுங்கள்.
இனிமேல், தர்பூசணி பழத்தை சாப்பிடும்போது விதைகளை எடுக்க முடியாமல் சிரமப்படாதீர்கள், தர்பூசணியை வெட்டும்போது இந்த ஐடியாவை ஃபாலோ பண்ணி நறுக்கினால் ஒரு நிமிடத்தில் விதையில்லாமல் தர்பூசணி துண்டுகள் ரெடி, அப்படியே சாப்பிடுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"