சமையல் என்பது பொதுவாக பலருக்கும் பிடிக்காத ஒன்று. எனவே, சமையலறையில் அதிக நேரம் செலவழிக்காமல் முடிந்தவரை சீக்கிரம் சமைக்கவும், சமையல் தொந்தரவு இல்லாததாகவும் இருக்க பலர் விரும்புகிறார்கள்.
Advertisment
இதுபோன்ற சமயங்களில், சமைப்பதைத் தொந்தரவில்லாத அனுபவமாக்கும் குறிப்புகள் மற்றும் தந்திரங்ள் இங்குள்ளன.
ஊட்டச்சத்து நிபுணர் கிரண் குக்ரேஜா, சமையலறையில் உதவும் சில ஹேக்குகளை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
*பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ், இரவு முழுவதும் ஊற வைக்கவும், இது சமைக்கும் நேரத்தை குறைக்க உதவுகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.
*காய்கறிகளை நறுக்கிய பின் கழுவ வேண்டாம், ஏனெனில் அந்த காய்கறிகளில் இருக்கும் ’நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள்’ கரைந்துவிடும். அதற்கு பதிலாக, காய்கறிகளை முதலில் கழுவவும், பின்னர் அவற்றை நறுக்கவும்.
*காய்கறிகளை பெரிய துண்டுகளாக வெட்டவும், ஏனெனில் நீங்கள் காய்கறிகளை சிறிய துண்டுகளாக வெட்டி, சமைக்கும் போது, தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், சில சமையல் திரவத்தில் வெளியேறலாம். இதனால் சத்துக்கள் இழக்க நேரிடும் என்றார் குக்ரேஜா.
உப்பு எப்போது போட வேண்டும் என்பது இங்கே
*வெந்நீரில் கிரீன் டீ பேக்ஸ் போட வேண்டாம்: சில மக்காத டீ பேக்ஸ், குறிப்பாக நைலான் அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை, சூடான நீரில் மூழ்கும் போது மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை வெளியிடும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
*அலுமினியத் தாளுடன் ஒப்பிடும்போது, Parchment paper (காகிதத் தாள்) சமையல் மற்றும் பேக்கிங்கிற்கு பாதுகாப்பான விருப்பமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அது உணவுடன் வினைபுரியாது, எனவே தீங்கு விளைவிக்காது.
உணவியல் நிபுணர் கரிமா கோயல் கருத்துப்படி, காகிதத் தாளில் heat-resistant nonstick coating உள்ளது, இது ஓவனில் பயன்படுத்த பாதுகாப்பானது.
*அசாஃபோடிடா என்றும் அழைக்கப்படும் பெருங்காயம், இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மசாலா ஆகும்.
இது செரிமான பண்புகளைக் கொண்டுள்ளது. பருப்பு, பீன்ஸ், காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற சில காய்கறிகளை உட்கொள்ளும் போது சில நேரங்களில் ஏற்படும் வாயு மற்றும் வீக்கத்தை குறைக்க உணவுகளில் சேர்க்கப்படுகிறது.
அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் காரணமாக, இது வயிற்று தொற்றுக்கான வாய்ப்பைக் குறைக்கிறது, என்று கரிஷ்மா பகிர்ந்து கொண்டார்.
சோடியம் உட்கொள்வதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், ஆரம்பத்தில் இல்லாமல், சமையலின் முடிவில் உப்பு சேர்ப்பது பயனுள்ள நடைமுறையாக இருக்கும்.
இது உணவுகளில் அதிக உப்பைத் தடுக்க உதவுகிறது. அளவாக சமைக்கும் போது, அல்லது குழம்பு, சாஸ் போன்ற உப்புப் பொருட்களைப் பயன்படுத்தும் போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என்று குக்ரேஜா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“