சமையலறையில் நேரத்தைச் செலவிடுவது உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் உங்களுக்காக அல்லது வேறொருவருக்காக விரைவாக உணவைத் தயாரிக்க வேண்டிய நேரம் வரலாம். ஆனால் நீங்கள் விரும்பாத அல்லது வழக்கமாகச் செய்யாத சமையல் வேலை, ஒரு கடினமான பணியாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
அப்படியானால், சமையலை உங்களுக்கு சுவாரஸ்யமாக்கும் (குறைந்தபட்சம் எளிதாக்கும்) மற்றும் சமையலறையில் உள்ள விஷயங்களை எளிதாக்க உதவும் சில குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் இங்கே உள்ளன.
பூண்டு உரிக்க அதிக நேரம் ஆகும். குறிப்பாக தோல் சிக்கிக்கொண்டால், அதை அகற்ற நீங்கள் போராட வேண்டியிருக்கும். ஆனால் கவலைப்பட வேண்டாம், பூண்டின் அடிப்பகுதியை வெட்டி, சில நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். குளிர்ந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் தோலை மென்மையாக்கும். இதனால் தோல் ஒரே நேரத்தில் வெளியே வரும். மேலும், நீங்கள் ஒவ்வொரு முறை சமைக்கும்போதும், பூண்டு சேர்க்க விரும்புபவராக இருந்தால், பூண்டை ஒரு இரவு ஊறவைத்து, காலையில் அதை தோலுரித்து, வரும் வாரத்திற்கு குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கவும்.
கத்தியைப் பயன்படுத்தி இஞ்சியை உரிப்பது தேவையானதை விட அதிக சதையை உரிக்கிறது. அதற்கு பதிலாக, ஒரு ஸ்பூன் கொண்டு இஞ்சியை உரிக்கவும். மேலும் இஞ்சியின் சிறிய கிரானிகள் மற்றும் வளைவுகளில் உள்ள தோலை ஒரு ஸ்பூனைக் கொண்டு எளிதில் நீக்கிவிடலாம்.
மந்தமான கத்திகளை வைத்து காய்கறிகளை வெட்டுவது ஒரு சிக்கலான விஷயம். இப்போது உங்களுக்கு தேவையானது ஒரு பீங்கான் குவளை. குவளையின் அடிப்பகுதியில், கத்தியின் கூர்மையான விளிம்பை கவனமாக தேய்க்கவும். அவ்வளவுதான் இனி காய்கறிகளை நறுக்குவது சீராக இருக்கும்.
கருகிய பாத்திரத்தை சுத்தம் செய்ய, எரிந்த அடிப்பகுதியில் பேக்கிங் சோடா தூவி, நான்கைந்து டேபிள்ஸ்பூன் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். அதை ஒரு இரவு ஊற வைத்து, கருகிய எச்சங்களை ரப்பர் ஸ்பேட்டூலா மூலம் துடைக்கவும்.
சாத்துக்குடி மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை தோலுரிப்பது ஒரு பெரிய வேலை. இதோ உங்களுக்கான குறிப்பு- பழங்களை உருட்டவும் அல்லது மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைக்கவும். இப்படி செய்தால் தோல் எளிதாக உரிந்துவிடும்.
உங்கள் பான் அல்லது பாத்திரத்தின் காப்பர் பாலிஷை பராமரிக்க, ஒரு மெல்லிய கோட் கெட்ச்-அப்பை தடவி, சிறிது நேரம் கழித்து சுத்தமான துணியால் தேய்க்கவும்.
நீங்களும் இந்த கிச்சன் குறிப்புகளை பின்பற்றி உங்கள் சமையல் வேலைகளை எளிதாக்குங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil