Advertisment

நெய்’ பழையதாகி விட்டதா? இதை செய்தால் போதும், ஒரு நிமிடத்தில் நெய் புதிது போல மாறிவிடும்!

தூய பசு நெய்யுடன் வீட்டில் சமைக்கும் போது நீங்கள் செய்யக்கூடிய ஆறு தந்திரங்கள் இங்கே உள்ளன.

author-image
WebDesk
New Update
நெய்’ பழையதாகி விட்டதா? இதை செய்தால் போதும், ஒரு நிமிடத்தில் நெய் புதிது போல மாறிவிடும்!

இங்கே உங்கள் சமையலை எளிதாக்கும் சில குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் உள்ளன. அவை உங்களுக்கு சமையலை சுவாரஸ்யமாக்கும், மேலும் சமையலறையில் உள்ள சில விஷயங்களை எளிதாக்க உதவும்.

Advertisment

தூய பசு நெய்யுடன் வீட்டில் சமைக்கும் போது நீங்கள் செய்யக்கூடிய ஆறு தந்திரங்கள் இங்கே உள்ளன.

* வீட்டில் பழைய நெய் ஏதாவது இருக்கிறதா? அதை தூக்கி எறியாதீர்கள்! நெய்யுடன் சிறிது தயிர் சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு கிலோ நெய்க்கு, இரண்டு தேக்கரண்டி தயிர் என்ற விகிதத்தில் சேர்க்கவும். கொதித்ததும், ஆறவைத்து, வடிகட்டி மீண்டும் உபயோகிக்கவும். உணவை மறுசுழற்சி செய்வதற்கும், மீண்டும் பயன்படுத்துவதற்கும் எப்போதும் ஒரு வழி இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* நம்மில் பலரும் வீட்டு உணவைத்தான் விரும்புகிறோம், எதுவாக இருந்தாலும், பருப்பு குழம்பு போன்ற சுவை வேறு எந்த உணவிலும் இல்லை. உங்கள் பருப்பின் சுவையை அதிகரிக்க, அதை கொதிக்க வைப்பதற்கு முன், அதில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் நெய் சேர்க்கவும்.

* உணவை வறுக்க, சுத்தமான நெய்யைப் பயன்படுத்துவது உங்கள் உணவின் சுவையை பெரிதும் மேம்படுத்துகிறது. காய்கறி வறுவல் அல்லது பொறியல் செய்யும்போது சமையல் எண்ணெய் அல்லது வெண்ணெய்க்குப் பதிலாக நெய்யைப் பயன்படுத்தவும்.

* அதிக ஸ்மோக் பாயிண்ட் இருப்பதால், அதிக வெப்பத்தில் சமைக்கும் போது, ​​மற்ற தாவர எண்ணெய் அல்லது வெண்ணெயை விட நெய்யைத் தேர்ந்தெடுக்கவும். எண்ணெய்’ புகைபிடிக்கத் தொடங்கும் போது, ​​அது துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல், உங்கள் உணவை ஆரோக்கியமற்றதாக்குகிறது.

* தூய நெய் 400-500 டிகிரி ஸ்மோக்கிங் பாயிண்ட் கொண்டுள்ளது- இது மற்ற எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகளை விட மிக அதிகம். இது அதிக வெப்பத்தில் சமைக்கும் போது ஆரோக்கியமாக மற்றும் சுவையாக இருக்கும்.

* சமைத்த உணவை சுவையூட்டுவது எப்போதும் உணவிற்கு கூடுதல் சுவையை சேர்க்கிறது. நீங்கள் உருளைக்கிழங்கு வறுக்கும் போது, நெய்யுடன் சில மூலிகைகள் மற்றும் பிற மசாலாப் பொருட்களைக் கலந்து, அதை உருளைக் கிழங்கு வறுக்கும் போது பயன்படுத்தலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment