வீட்டை சுத்தமாக பராமரிப்பது மிகவும் சவாலாக இருக்கும். எனினும், சில சிம்பிளான டிப்ஸ்களை பின்பற்றும் போது அதனை எளிதாக மாற்ற முடியும். அதன்படி, சில பயனுள்ள க்ளீனிங் டிப்ஸ்கள் குறித்து தற்போது காணலாம்.
Advertisment
நம் வீட்டில் இருப்பதிலேயே மிகவும் அழுக்காக இருக்கும் பொருள் என்னவென்று பார்த்தால், அவை டோர்மேட்டாக தான். இதன் பயன்பாடு நாள்தோறும் ஒவ்வொரு நிமிடமும் இருந்தாலும், இதனை அடிக்கடி துவைக்க மாட்டோம்.
இதன் காரணமாக இதில் அதிகப்படியான அழுக்குகள் சேர்ந்திருக்கும். எனவே, இவற்றை துவைப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும். கை வலிக்க துவைக்க வேண்டியதாக இருக்கும். ஆனால், இந்த வேலையை எளிதாக மாற்ற முடியும். இதற்கு வாஷிங் மெஷினும் தேவையில்லை.
ஒரு பக்கெட்டில் சற்று சூடான தண்ணீர் எடுத்து அதில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து கலக்க வேண்டும். இதில் டோர்மேட்டை சுமார் 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்யும் போது அதில் இருந்து 75 சதவீத அழுக்குகள் நீங்கி விடும்.
Advertisment
Advertisements
இதையடுத்து, மற்றொரு பக்கெட்டிலும் சற்று சூடான தண்ணீர் எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் சோப்பு பௌடர் போட்டு கலக்க வேண்டும். இதிலும் டோர்மேட்டை 5 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் டோர்மேட் சுத்தமாகி விடும்.
நம் வீட்டில் சிறிய குழந்தைகள் இருந்தால், சுவற்றில் அதிகமாக ஏதாவது எழுதி அல்லது படம் வரைந்திருப்பார்கள். இதனை துடைப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று நினைப்போம். ஆனால், இதனையும் சுலபமாக மாற்ற முடியும்.
இதற்காக ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து எடுத்துக் கொள்ளலாம். இதனை சுவற்றில் தெளித்து விட்டு துடைத்தால் கறைகள் அனைத்தும் நீங்கி விடும்,
மேலும், டி.வி-க்கு பின்புறம் இருக்கும் கறைகளையும் எளிதாக துடைக்கலாம். முதலில் ஒரு டிஷ்யூ பேப்பர் கொண்டு லேசாக அவற்றை துடைக்க வேண்டும். அதன் பின்னர், ஒரு காட்டன் துணியில் இந்தக் கலவையை தெளித்து விட்டு, டி.வி-யின் பின்புறத்தை துடைக்கலாம். இப்படி செய்தால் அவை சுத்தமாகி விடும்.