நம் கிட்சன் வேலைகளை மிக எளிதாக மாற்றுவதற்கு சில டிப்ஸ்கள் இந்த செய்திக் குறிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றுவதன் மூலம் நமது கிட்சன் பராமரிப்பை சுலபமாக்கலாம்.
அலுவலகங்கள், பெரு நிறுவனங்கள் போன்றவற்றை சரியாக நிர்வகிப்பதை போலவே வீட்டை சரியாக பராமரிப்பதும் சவாலான காரியம் தான். அதிலும், கிட்சன் பராமரிப்பு கூடுதல் சிரமமாக இருக்கும். பேச்சிலர்கள், குடும்பமாக வசிப்பவர்கள் என யாராக இருந்தாலும் இதற்காக அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கும்.
Advertisment
நம் கிட்சனை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் சர்க்கரை, உளுந்து மற்றும் கோதுமை ஆகியவை வைத்திருக்கும் டப்பாக்களில் எறும்பு, வண்டுகள் போன்றவை அடிக்கடி வரும். இதற்காக டப்பாக்களை அடிக்கடி மாற்றினாலும் இதே நிலை தொடரும். ஆனால், சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இதனை தடுக்க முடியும்.
முதலில் சர்க்கரைக்கான டிப்ஸை பார்க்கலாம். சர்க்கரை இருக்கும் டப்பாவிற்குள் 4 அல்லது 5 கிராம்புகளை போட்டு அவற்றை மூடி வைத்து விடலாம். இப்படி செய்வதன் மூலம் சர்க்கரையின் தன்மையும் மாறாமல் இருக்கும். அதே நேரத்தில், சர்க்கரைக்கு எறும்புகள் வருவதை தடுக்கவும் முடியும். அடிக்கடி டப்பாவை மாற்ற வேண்டிய தேவை இருக்காது.
இதேபோல், உளுந்து வைத்திருக்கும் டப்பாவில் அடிக்கடி வண்டு வரும். இவை ரேஷன் கடைகளில் இருந்து வாங்கிய உளுந்தாக இருந்தாலும் சரி, வேறு கடைகளில் இருந்து வாங்கியதாக இருந்தாலும் சரி, இந்த தொல்லை எல்லோரது கிட்சனிலும் நிச்சயமாக இருக்கும். இதனை தடுப்பதற்கு உளுந்து இருக்கும் டப்பாவிற்குள் சில மிளகாய்கள் போட்டு வைக்கலாம். அதன் காரத்தன்மைக்கு வண்டுகள் வராமல் இருக்கும்.
Advertisment
Advertisements
இதேபோல், கோதுமை மாவில் வண்டு வராமல் இருப்பதற்கும் சூப்பரான டிப்ஸ் ஒன்று இருக்கிறது. அதன்படி, இரண்டு டீஸ்பூன் உப்பை கோதுமை மாவு இருக்கும் டப்பாவிற்குள் கலந்து வைக்கலாம். இதேபோல், மிளகாய் பொடியையும் இதற்கு பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது கோதுமை மாவிலும் எறும்புகள் அல்லது வண்டுகள் வருவது தடுக்கப்படும்.
இது போன்ற சிம்பிளான டிப்ஸை பின்பற்றுவதன் மூலம் நம் கிட்சன் பராமரிப்பு வேலைகளை நம்மால் திறம்பட செய்திட முடியும்.