Simple Mor Kuzhambu Mor Kolambu Recipe Tamil : குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருள் என்றால் அது மோர்க் குழம்பு.
சாம்பார், ரசம், புளிக்குழம்பு என ஒரேபோன்ற குழம்பு வைத்து சலித்துப்போனவர்களுக்கான சூப்பர் ஆப்ஷன், மோர்க்குழம்பு. அதிலும் சுவை அதிகரிக்க இங்கு பகிரப்பட்டுள்ள ஸ்பெஷல் பேஸ்ட் சேர்த்து மோர் குழம்பு செய்து பாருங்கள். நிச்சயம் மறுமுறை செய்வீர்கள்.
மசாலா பேஸ்ட்டுக்கு :
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சரிசி – ½ டீஸ்பூன்
தனியா விதைகள் – 2 டீஸ்பூன்
தண்ணீர் (ஊறவைக்க) – 1/2 கப்
துருவிய தேங்காய் – ½ கப்
பச்சை மிளகாய் – 3
மோர் குழம்புக்கு :
பூசணி / வெள்ளை பூசணிக்காய் / வெள்ளரி (நறுக்கியது) – 1½ கப்
தண்ணீர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
சற்று புளித்த தயிர் – 1 கப்
தாளிக்க :
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
முதலாவதாக, ஒரு சிறிய கிண்ணத்தில் துவரம் பருப்பு, சீரகம், பச்சரிசி மற்றும் கொத்தமல்லி விதைகளைச் சேர்த்து, அதில் தண்ணீர் கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
[பிறகு ஊறவைத்த பருப்பு மற்றும் மசாலாப் பொருள்களோடு தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு பெரிய கடாயில் நறுக்கிய பூசனிக்காயைச் சேர்த்து, அதில் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் மூடி வைக்கவும்.
பிறகு, பூசனிக்காயோடு தயாரிக்கப்பட்ட தேங்காய் மசாலா பேஸ்ட்டை சேர்க்கவும்.
குறைந்த தீயில் இந்தக் கலவையோடு தயிர் சேர்க்கவும். தயிர் நன்றாக இணைக்கும் வரை தொடர்ந்து கலந்துவிடவும்.
இப்போது, சூடான வாணலியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
தயார் செய்து வாய்த்த மோர்க் குழம்பு மீது இந்தத் தாளிப்பை ஊற்றினால் சுவையான மோர்க் குழம்பு தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“