ஆரோக்கியமான கம கம பருப்பு ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 1 ஸ்பூன்
தனியா – முக்கால் ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
தக்காளி – 2
புளி – நெல்லிக்காய் அளவு
பூண்டு பற்கள் தோலுடன் – 5
தாளிக்க
நெய்
கடுகு
பெருங்காயம்
மல்லித்தழை 1 கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் துவரம் பருப்பு, தனியாத் தூள், சீரகம், காய்ந்த கறிவேப்பிலை இவைகளை அடுப்பில் போட்டு வறுத்து தனியாக பொடியாக்கி வைக்கவும். அடுத்து உப்பு சேர்த்து புளி கரைசல் தயார் செய்யவும். இதை செய்தபின் அதில் வேக வைத்த தக்காளி பிசைந்து மஞ்சள் பொடி, இடித்த பொடியையும் போட்டு, பூண்டை தட்டிப் போட்டு விடவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், பச்சை கறிவேப்பிலை, மிளகாய் கீறிப்போட்டு தாளித்து புளிநீர் கலவையை ஊற்றவும். இப்போது இவை ஒரு கொதி வந்ததும் இறக்கி மல்லித்தழை தூவி விட்டால் கம கம பருப்பு ரசம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“