/tamil-ie/media/media_files/uploads/2020/11/rasam_759.jpg)
hotel rasam recipe hotel style rasam
Rasam Recipe Tamil : சில நேரங்களில், நீண்ட நேரம் வேலை செய்தபின் சமையலை நிர்வகிப்பது என்பது கடினமாகத் தோன்றும். சுவையாகவும் விரைவான மற்றும் எளிதான சமையல் வகைகளைத் தொடர்ந்து தேடுகிறீர்களா? அப்படியானால் கவலையை விடுங்கள். தென்னிந்திய ரசத்தில், ஒரு சூப்பர் ஈஸி ரெசிபியை இன்று நாம் கற்றுக் கொள்வோம். ரசம் செய்முறை புதியதல்ல என்றாலும், பலர் ரசம் பொடியைச் சேர்க்கிறார்கள் அல்லது வீட்டிலேயே ரசப்பொடி தயாரிக்கிறார்கள். ஆனால், இந்த செய்முறையில் நீங்கள் அப்படியெல்லாம் எதுவும் நீங்கள் தயாரா செய்யப்போவதில்லை.
செய்வதற்கு மட்டுமல்ல, ரசம் சாதம் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவு வகையும்கூட. அதிலும் இந்த மழைக்காலத்திற்கு மிகவும் ஏற்ற எளிமையான உணவு. ஒவ்வொரு இந்தியச் சமையலறையிலும் காணப்படும் ஐந்து அடிப்படை பொருட்கள் மட்டுமே வைத்து சுவையான ரசம் எப்படிச் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
தோராயமாக நறுக்கப்பட்ட தக்காளி - 1
வேகவைத்த துவரம் பருப்பு - 1/4 கப்
15 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் நனைக்கப்பட்ட இம்லி / புளி - 1 எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 1 1/4 டீஸ்பூன்
கல்லுப்பு / உப்பு - 1டீஸ்பூன்
செய்முறை
ஒரு கடாய் எடுத்து மிதமான தீயில் இம்லி மற்றும் தண்ணீர் சேர்க்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி, வேகவைத்துக் கடைந்த பருப்பு, சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்க்கவும். இந்தக் கலவையை சுமார் 15 நிமிடங்கள் கொதிக்க விடவும். விரும்பினால் சிறிது கொத்தமல்லி சேர்க்கலாம். சூடாகப் பரிமாறவும்.
இந்த உணவு ஏன் அவசியம்?
சாம்பார் தூள் அனைத்து மசாலாப் பொருட்களின் சரியான கலவை. இம்லி அல்லது புளி அதன் தென்னக சுவையைச் சேர்க்கிறது. இவை இரண்டும் தக்காளியின் சாற்றுடன் நன்றாக இணைத்து சுவையான கலவையை உருவாக்குகின்றன. எப்பேற்பட்ட குளிரும் ஜூரமும் இந்த ரசத்தைக் கண்டாலே பறக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.