இனி அடிக்கடி சிலிண்டர் வாங்க வேணாம்... காசை மிச்சப் படுத்த இத செஞ்சு பாருங்க!

எரிவாயு ஒரு முக்கியமான இல்ல உபயோகப் பொருள். அதன் செலவை கட்டுப்படுத்த, சிறிய மாற்றங்கள், தினசரி கவனம், மற்றும் பழைய பிழைகளைத் திருத்துவது போதும்.

எரிவாயு ஒரு முக்கியமான இல்ல உபயோகப் பொருள். அதன் செலவை கட்டுப்படுத்த, சிறிய மாற்றங்கள், தினசரி கவனம், மற்றும் பழைய பிழைகளைத் திருத்துவது போதும்.

author-image
Mona Pachake
New Update
download - 2025-10-06T181814.335

பண்டிகைக் காலத்தில் தான் அதிகம் சமைப்போம் என்பதற்காக சிலிண்டர் விரைவில் தீர்வது என நினைத்தால் தவறு. இன்று, தினசரி சமையலுக்கே எரிவாயு போதாத நிலை ஏற்பட்டுள்ளது. பலர் இதற்கான காரணங்களை சிலிண்டர் குறைவாக நிரப்பப்பட்டுள்ளது, அல்லது தொழில்நுட்ப கோளாறு என எண்ணுகிறார்கள். ஆனால் உண்மையான காரணம் வேறு.

Advertisment

தவறு நம்மிடம்தான்... உணராமலே எரிவாயுவை வீணாக்குகிறோம்!

நாம் செய்யும் சில பழக்கவழக்கங்கள், எரிவாயு சிலிண்டரை அதிகம் பயன்படுத்தும் நிலையை உருவாக்குகின்றன. அதேசமயம், சில தவறுகள் உங்கள் சிலிண்டரை குறைந்த நாட்களில் தீர்த்துவிடும்.

குளிர்காலத்தில் எரிவாயு உறையும் அபாயம்!

குளிர்காலங்களில் சிலிண்டர் உள்ளே உள்ள எரிவாயு உறைந்து, வெளியில் வராமல் தடையூட்டம் ஏற்படுகிறது. இதனால் அடுப்பு பலவீனமாக வேலை செய்யும், மேலும் நாம் தவறாக அதிக நேரம் வைக்கத்தொடங்கினால், சிலிண்டர் விரைவாக முடிந்துவிடும்.

கசிவுகள் மூலமாக எரிவாயு வீணாகும்!

குழாய் அல்லது ரெகுலேட்டரில் உள்ள சிறிய கசிவுகளால் கூட, எரிவாயு மெதுவாக வெளியேறி விடும். இது குடும்பத்தின் மாதாந்திர செலவைக் கூட அதிகரிக்கிறது.

Advertisment
Advertisements

சிறிய மாற்றங்கள் மூலம் எரிவாயு சேமிக்கலாம் – எளிய வழிகள்:

1. பிரஷர் குக்கர் பயன்பாடு:

பிரஷர் குக்கரில் சமைத்தால், உணவு விரைவாக வெந்து முடிவதுடன், குறைந்த எரிவாயுவும் பயன்படும்.

2. பாத்திரங்கள் அறை வெப்பத்தில் இருக்க வேண்டும்:

ஈரமாகவோ, குளிர்சாதன பெட்டியில் இருந்த பாத்திரங்களை நேரடியாக அடுப்பில் வைக்காதீர்கள். இதனால் அதிக நேரம் எரிவாயு செலவாகும்.

3. நடுத்தர வெப்பம் பயன்படுத்துங்கள்:

அதிக தீயை விட மிதமான தீ உணவை மெதுவாக சமைக்க உதவுவதுடன், எரிவாயுவும் மிச்சப்படும்.

4. குழாய், ரெகுலேட்டர், சிலிண்டர் சரிபார்க்கவும்:

அவைச் சீராக செயல்படுகிறதா என்பதை சோப்புநீர் மூலம் குமிழ்கள் உள்ளதா என பார்த்து அறியலாம்.

5. குளிர்காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள்:

சிலிண்டரை சணல் பை அல்லது கம்பளிப் போர்வையால் மூடுங்கள். சில நேரம் வெதுவெதுப்பான நீரில் ஓரமாக வைத்தால் வாயு உறைவது தவிர்க்கலாம். சிலிண்டரை நேரடியாக தரையில் வைக்காமல், அதனை தள்ளுவண்டியில் வைக்குவது சிறந்தது. இது நிலம் கொண்டு வரும் ஈரப்பதத்தைத் தவிர்க்க உதவும்.

பழைய சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டர்கள், அடுப்பின் செயல்திறனை குறைத்து எரிவாயுவை அதிகம் பயன்படுத்த வைக்கும். அவற்றைச் சரியான நேரத்தில் புதியதாக மாற்றுவது அவசியம். அடுப்பில் சமைக்கும் போது பாத்திரங்களை மூடிவைத்தால், வெப்பம் விரைவில் சூடாகி உணவு வேகமாக சமைந்து விடும். இது எரிவாயு சேமிக்கும் ஒரு சிறந்த வழி. எரிவாயுவை காபி, டீ, சிறிய சிறிய தேவைகளுக்காக பலமுறை பயன்படுத்தும் பழக்கம் இருந்தால், அதை குறைத்து ஒருங்கிணைக்கவும். ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்து, அதிகமாவதையும், வீணாகாமலையும் கவனிக்கலாம்.

எரிவாயு ஒரு முக்கியமான இல்ல உபயோகப் பொருள். அதன் செலவை கட்டுப்படுத்த, சிறிய மாற்றங்கள், தினசரி கவனம், மற்றும் பழைய பிழைகளைத் திருத்துவது போதும். இந்த வழிமுறைகள், உங்கள் வீட்டுத் தேவை பூர்த்தி செய்வதுடன், செலவையும் கட்டுப்படுத்தும்.

முடிவாக...

உங்கள் சிலிண்டர் விரைவில் தீர்ந்து விடுவதற்கான காரணம் நீங்கள் உணராமல் செய்யும் தவறுகள் தான். இன்று முதல் எரிவாயு முறையாக சேமிக்கும் பழக்கங்களை உருவாக்குங்கள். உங்கள் வீட்டுப் பட்ஜெட் காப்பாற்றப்படுவதுடன், சுற்றுச்சூழலுக்கும் நன்மை!

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: