/indian-express-tamil/media/media_files/2024/11/13/n5INX4I0JDQLDbJKcRst.jpg)
ஹைபர் சென்சிடிவ்வாக இருப்பவர்களுக்கும் சைனஸ் பிரச்னை வரக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் இப்பிரச்னைக்கு எளிய தீர்வு மற்றும் அதற்கான விளக்கத்தை சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், சைனஸ் பிரச்னை முன்பு அலர்ஜி இருப்பவர்களுக்கு மட்டும் இருந்தது. இப்போது சுற்றுச்சூழல் மாசு காரணமாக சைனஸ் பிரச்னை பலருக்கும் வருகிறது. பொதுவானதாக மாறிவிட்டது. சைனஸ் பிரச்னை மரபாக வரக் கூடிய வாய்ப்பு உள்ளது. தாத்தா, தந்தைக்கு இருந்தால் அது அவர்களது குழந்தைகளுக்கும் வர வாய்ப்பு உள்ளது.
அப்படி யாருக்கும் இல்லை என்றால் சுற்றுச்சூழல் காரணமாக வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஹைபர் சென்சிடிவ்வாக இருப்பவர்களுக்கும் சைனஸ் பிரச்னை வரக் கூடிய வாய்ப்பு உள்ளது.
வீட்டில் உள்ள தூசி, சமையல் செய்யும் போது வரும் வாசனையின் போது சிலர் தும்மல் ஈடுவர். தொடர்ந்து தும்மல் ஈடுவர் இவர்களுக்கும் இந்த வாய்ப்பு உள்ளது. மனதளவில் அமைதியாகவும், பதற்றம் இல்லாதவர்களுக்கு இந்த சைனஸ் பிரச்னை வாய்ப்பு குறைவு என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் தினமும் 10- 13 மிளகு எடுத்துக் கொள்ள வேண்டும். மிளகை பொடி செய்து சாப்பாடு, ப்ரைட் டோஸ்ட், காய்கறிகளில் சேர்த்து சாப்படலாம். சைனஸ் உள்ளவர்களுக்கு தோல் நோய் வரலாம். சிலருக்கு ஆஸ்துமா கூட வர வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க எளிய தீர்வாக மருந்தாக மிளகை எடுத்துக் கொள்ளலாம். நீர்க்காய்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம் என மருத்துவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.