Simple Sambar Recipe Tamil : எப்போதும் பருப்பை வேகவைத்து சாம்பார் செய்யும் செய்முறைக்கு பதிலாக, பருப்பை வறுத்து அரைத்து இப்படி செய்து பாருங்கள். வித்தியாச சுவை மட்டுமல்லாமல், இதனை செய்வதற்கான நேரமும் குறைவு.
தேவையான பொருள்கள் :
வறுத்து அரைக்க :
துவரம் பருப்பு – 1/4 கப்
கொத்தமல்லி விதைகள் – 3 டீஸ்பூன்
கருப்பு மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
வெந்தய விதைகள் – 1/8 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
உலர்ந்த சிவப்பு மிளகாய் – 4-6
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சாம்பாருக்கான பிற பொருட்கள்
சின்ன வெங்காயம் – 20
நறுக்கிய தக்காளி – 1
பெல் பெப்பர் க்யூப் – 1
கெட்டியான புளி சாறு – 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 கப்
செய்முறை :
பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் கொத்தமல்லி விதைகள், கருப்பு மிளகுத்தூள், வெந்தயம், கடலை பருப்பு, உலர்ந்த சிவப்பு மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இப்போது துவரம் பருப்பைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு இந்தக் கலவையைக் குளிரவைக்கவும்.
குளிர்ந்ததும், வறுத்த பொருட்களை அடர்த்தியான பேஸ்ட்டாக அரைக்கவும். கெட்டியான பேஸ்ட் தயாரிக்க போதுமான தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
இப்போது குக்கரில் இருக்கும் மீதமான எண்ணெய்யை மீண்டும் சூடாக்கவும். அதில், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
பிறகு, வெங்காயம், தக்காளி மற்றும் பெல் பெப்பர் ஆகியவற்றைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
மஞ்சள் தூள் மற்றும் புளி சாறு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
இப்போது அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 4 விசில் வரை சமைக்கவும்.
அழுத்தம் வெளியானதும் சாம்பாரின் நிலைத்தன்மையைச் சரிபார்க்கவும். உங்கள் விருப்பத்திற்கு இது மிகவும் கெட்டியானதாக இருந்தால் இருந்தால் 1 / 4-1 / 2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி நிலைக்குக் கொண்டு வாருங்கள்.
இறுதியாகக் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து சாம்பாருடன் சாதத்தைச் சேர்த்துப் பரிமாறவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“