/indian-express-tamil/media/media_files/2025/10/01/screenshot-2025-10-01-164756-2025-10-01-16-48-18.jpg)
நமது உடலில் வெயிலின் தாக்கம் அதிகமாக பாதிக்கும் பகுதிகள் முகம், கை மற்றும் கால்கள். முகத்திற்கு நாம் அதிக பராமரிப்பு கொடுக்கும் காரணத்தால் முக சருமம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் கை, கால்களுக்கு அவ்வளவு கவனம் கொடுக்காமல் இருப்பதால் அவை அதிக வெயிலால் கரும்பு மற்றும் பளிங்கான தோற்றம் கொடுக்கும். உங்கள் கை, கால்கள் கூட இப்படி கருப்பாக உள்ளதா? அவற்றை வெள்ளையாக மாற்ற விரும்புகிறீர்களா? இருந்தால், கை, கால்களுக்கு பராமரிப்பைத் தொடங்குங்கள்.
வீட்டில் உள்ள சாதாரண பொருட்களைக் கொண்டு செய்யப்படும் சரும ஸ்க்ரப் மூலம், கை மற்றும் கால்களில் உள்ள இறந்த செல்கள் அகன்று சருமத்தின் நிறம் பிரகாசிக்கும். இப்போது, கை மற்றும் கால்களில் உள்ள கருமையை குறைக்கும் சில இயற்கை முறைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை சாறு
இதற்கு முதலில் ஒரு பவுலில் உருளைக்கிழங்கு விழுதும் சிறிது எலுமிச்சை சாற்றும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த கலவையை கை மற்றும் கால்களில் தடவி, 15-20 நிமிடம் ஊறவைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் கை, கால்களை சுத்தமாக கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்தால், கை மற்றும் கால்களில் உள்ள கருமை குறைந்து சருமம் வெளிர்ந்து நன்கு மாறுவதை காணலாம்.
ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தயிர்
இதற்கு ஒரு பௌலில் ஓட்ஸ் பொடியை எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த கலவையை கை மற்றும் கால்களில் தடவி 10-15 நிமிடம் ஊறவைக்க வேண்டும். அதன் பின் மென்மையாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். கழுவியபின் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தி பராமரிக்க வேண்டும். இதை வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்தால், கை மற்றும் கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பளிச்சென்று அழகாக இருக்கும்.
தக்காளி
இதற்கு நன்கு கனிந்த தக்காளியை எடுத்து வெட்டி, ஒரு தக்காளி துண்டை எடுத்துப் பக்கத்தில் சர்க்கரை தொட்டு, கை மற்றும் கால்களில் மென்மையாக சிறிது நேரம் தேய்க்க வேண்டும். பின்னர் அதை 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன்பின் குளிர்ந்த நீரால் நன்கு கழுவிக் கொள்ளலாம்.
மில்க் க்ரீம், ஆரஞ்சு மற்றும் சந்தன பவுடர்
இதற்கு ஒரு பவுலில் மில்க் க்ரீம், ஆரஞ்சு பவுடர் மற்றும் சந்தன பவுடரை சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதை கை மற்றும் கால்களில் தடவி 30-35 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவி தொட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை பயன்படுத்தினால், கை மற்றும் கால்களில் உள்ள கருமை குறைந்து, சருமம் பளபளப்பாக மாறுவதை காணலாம்.
சோள மாவு, மஞ்சள் மற்றும் தேன்
இதற்கு ஒரு பவுலில் 1 டேபிள் ஸ்பூன் சோளமாவு, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதை கை மற்றும் கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் குளிர்ந்த நீரால் சுத்தமாக கழுவ வேண்டும். இதை வாரத்தில் 2 முறை தொடர்ந்து பயன்படுத்தினால், கை மற்றும் கால்களில் உள்ள கருமை குறைந்து பிரகாசமான சருமத்தை காண முடியும்.
இந்த இயற்கை முறைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால், உங்கள் கை மற்றும் கால்களின் கருமை நீங்கி, சுத்தம் மற்றும் பொலிவு மிக்க தோல் காண முடியும். வேதனையின்றி, இரசாயனப் பொருட்கள் இல்லாமல் நீங்கள் வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய இந்த நலன்கள் உங்கள் சருமத்தை பாதுகாக்கும் மற்றும் நன்கு பராமரிக்கும். சிறிது பொறுமை கொண்டு இதைப் பின்பற்றுங்கள், உங்கள் தோல் புதிய உயிரோடு மிளிரும் என்பதை நீங்கள் காணலாம். உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டையும் பராமரிக்க இந்த இயற்கை ரெசிபிகளை தினசரி அங்கீகரித்து அனுபவிக்கவும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.