/indian-express-tamil/media/media_files/2025/06/13/7qhqtAlvpEmF2ONc3ZAH.jpg)
குக்கர் கேஸ்கட் வீக் ஆவதற்கு என்ன காரணம், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ராஜி அம்மா சமையல் (Raji Amma Samayal) என்ற யூடியூப் சேனலில் ஒரு எளிய தீர்வு வழங்கியுள்ளனர்.
வீட்டில் அடிக்கடி குக்கர் கேஸ்கட் வீக் ஆகி பிரச்னை பண்ணுகிறதா, கவலைப்படாதீர்கள். குக்கர் கேஸ்கட் பிரச்னை வராமல் இருக்க ஒரு எளிய தீர்வு இதோ. ஆனால், குக்கரில் சமைக்கும்போது இந்த 3 தவறுகளை மட்டும் பண்ணாதீர்கள். அவை என்ன என்று பார்ப்போம்.
பலருடைய வீட்டிலும் குக்கர் கேஸ்கட் அடிக்கடி வீக் ஆகி பிரச்னை பண்ணும். இப்படி குக்கர் கேஸ்கட் வீக் ஆவதற்கு என்ன காரணம், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ராஜி அம்மா சமையல் (Raji Amma Samayal) என்ற யூடியூப் சேனலில் ஒரு எளிய தீர்வு வழங்கியுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
வீட்டில் குக்கரில் சமைக்கும்போது, குக்கரில் உள்ள கேஸ்கட் அடிக்கடி வீக் ஆகும். இதனால், கடைக்கு சென்று புதியதாக கேஸ்கட் வாங்கி போடுவீர்கள். அப்படி குக்கர் கேஸ்கட் வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
வழக்கமாக நீங்கள் குக்கர் கேஸ்கட் வாங்கும்போது, பழைய கேஸ்கட்டை அளவுக்கு எடுத்துச் சென்று வாங்குவீர்கள். ஆனால், இனிமேல் அப்படி செய்யாதீர்கள். குக்கரின் மேல் மூடியை மட்டும் எடுத்துச் சென்று அந்த அளவுக்கு கேஸ்கட் வாங்குங்கள். அளவு சரியாக இருந்தால், அங்கேயே கவரைப் பிரித்து, கேஸ்கட்டை குக்கர் மூடியில் போட்டுப் பாருங்கள். அடுத்து, அதை கேஸ்கட்டை சுற்றிப் பாருக்கள். அப்படி சுற்றும்போது கேஸ்கட் சுற்றாமல் இருந்தால், கேஸ்கட் சரியான அளவில் இருக்கிறது என்று அர்த்தம். ஒருவேளை கேஸ்கட் சுற்றினால், குக்கர் கேஸ்கட் லூஸாக இருக்கிறது என்று அர்த்தம். அதனால், கேஸ்கட் வாங்கும்போது, கடைக்கு குக்கர் மேல் மூடியை மட்டும் எடுத்து சென்று சரியான அளவில் வாங்குங்கள்.
இரண்டாவது, குக்கரில் சமைக்கும்போது, பலரும் செய்கிற தவறு என்ன வென்றால், குக்கரில் சமைப்பதற்கான பொருளைப் போட்டு தண்ணீர் ஊற்றி மூடி, மேலே விஸில் வெயிட் போட்டுவிட்டு, உடனடியாக கேஸ் ஸ்டவ்வில் வைத்து சமைப்பதுதான். அப்படி சமைக்கும்போது, சீராக அனல் பரவாமல், ஒரு பகுதியாக சூடாகும்போது, கேஸ்கட் முழுமையாக லாக் ஆகாமல் இருக்கும். இதனாலும் கேஸ்கட் வீக் ஆகும். அதனால், குக்கரில் சமைப்பதற்கான பொருளைப் போட்டு தண்ணீர் ஊற்றி மேல்மூடியை மூடுங்கள். ஸ்டவ் பற்ற வைத்த பிறகு, குக்கரில் இருந்து லேசாக ஆவி வரும்போது விசில் வெயிட் போட்டு மூடுங்கள். இப்படி செய்யும்போது, பொருட்கள் சீராக வேகும். கேஸ்கட் நன்றாக லாக் ஆகும்.
மூன்றாவது, குக்கரில் சமைக்கும்போது, தீயை ஹை ஃபிளேமில் வைத்து, அல்லது லோ ஃபிளேமில் வைத்து சமைக்கும்போது, பொருட்கள் வெந்தபின், குக்கரில் விசில் வந்ததும், ஸ்டவ்வை ஆஃப் செய்துவிட்டு உடனடியாக விசிலை எடுத்துவிட்டு, குக்கரில் இருந்து ஆவியை வெளியேற்றக் கூடாது. அப்படி வெளியேற்றும்போது, குக்கர் கேஸ்கட் வீக் ஆகும். அதனால், விசில் வந்த பிறகு, ஸ்டவ்வை ஆஃப் செய்துவிட்டு 10 நிமிடங்கள் கழித்துதான் குக்கரைத் திறக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், குக்கர் கேஸ்கட் நீண்ட நாள்களுக்கு இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.