Advertisment

நாங்க சொல்லலை... நிபுணர் சொல்றார்... இது செம்ம ‘சூப்’பர்!

Soup Recipe Tamil பருவகால காய்கறிகள் நிறைந்த சீரான உணவை உட்கொள்வது போன்று எதுவும் இல்லை. இந்த எளிதான சூப் தயாரிப்பை நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள். மீண்டும் மீண்டும் செய்வீர்கள்.

author-image
WebDesk
New Update
Simple Soup for Rainy Season Bell Peppers Coconut Milk Recipes

Simple Soup for Rainy Season

Simple Soup Recipe Tamil : சூடான பானங்களுடன் மழைக்காலத்தை அனுபவிப்பதை விடச் சிறந்தது என்ன? இந்த நேரத்தில், நம்மில் பலர் நம் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் உடற்பயிற்சி அளவை அதிகரிக்க பல்வேறு விஷயங்களை முயற்சி செய்து பார்ப்போம். அந்த வரிசையில் ஆரோக்கியத்தை வளர்ப்பதற்காகப் பருவகால காய்கறிகள் நிறைந்த சீரான உணவை உட்கொள்வது போன்று எதுவும் இல்லை. ஆயுர்வேத சிறப்பு செஃப் அம்ரிதா கவுர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளும் இந்த எளிதான சூப் தயாரிப்பை நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள். மீண்டும் மீண்டும் செய்வீர்கள்.

Advertisment

Simple Soup for Rainy Season Bell Peppers Coconut Milk Recipes Tamil Peppers Coconut Milk Soup Ingredients

‘சுட்ட குடை மிளகாய்தேங்காய்ப் பால் சூப்’ செய்யத் தேவையான பொருள்கள்

வெங்காயம் - 1

பூண்டு - 3-4

உங்களுக்கு விருப்பமான மூலிகைகள்

சுட்ட மிளகாய் - 2

சுவையூட்டுவதற்கு உப்பு மற்றும் மிளகு

அக்ரூட் பருப்புகள் - 2-3

தேங்காய்ப் பால்

வெல்லம் - 1 டீஸ்பூன்

வறுத்த சீரகத்தூள் - 1 சிட்டிகை

செய்முறை

* வெங்காயத்தை வதக்கி, அதனோடு பூண்டு மற்றும் மூலிகைகள் சேர்க்கவும்.

* வெங்காயம் கேரமல் போல் ஆனதும், சுட்ட குடை மிளகாயைச் சேர்க்கவும்.

* உப்பு மற்றும் மிளகு சேர்த்து வதக்கவும்.

* அடுப்பை அணைத்து, கலவையை நன்கு ஆற விடவும்.

* 2-3 வறுக்கப்பட்ட அக்ரூட் பருப்புகளைக் கலவையுடன் கலக்கவும்.

* வடிகட்டி மீண்டும் மிதமான சூட்டில் வேகவைக்கவும்.

* தேங்காய்ப் பால் சேர்த்துக் கலக்கவும்

* கூடுதல் கருப்பு மிளகு, ஒரு சிட்டிகை வறுத்த சீரகத்தூள் மற்றும் வெல்லம் சேர்க்கவும்.

* சூடான சைவ சூப் தயார்!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment