Tamil Health Update : இந்தியாவில் பருவகாலம் மாறும் போது நோய் தொற்றின் தாக்கம் அதிகரிக்கும். இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த ஏராளமான மருதந்துகள் இருந்தாலும் இயற்கை பொருட்களில் இருக்கும் மருத்துவ குணங்களுக்கு ஈடாகாது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இயற்கையில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் மனிதனுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த இயற்கை மருத்துவ முறைகளாக சமீப ஆண்டுகளாக வெகுஜன மக்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர் என்று கூறலாம். ஆனால் தற்போது உலகம் முழுவதும் தொற்றியுள்ள கொரோனா வைரஸ் இயற்கை பொருட்களின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தவும், தொற்று ஏற்படாமல் தடுக்கவும் இயற்கையில் கிடைக்கும் சில பொருட்கள் முக்கிய பங்காற்றுகிறது.
அந்த வகையில் இயற்கை மருத்துவத்தில் மிளகு எப்போதும் தனி இடம் பெற்றுள்ளது. இந்திய சமையலறையில் முக்கிய மூலப்பொருளாக பயன்படும் மிளகு சளி இருமல் போன்ற பல தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இவ்வாறு இயற்கை பொருட்களின் முக்கியத்துவம் மக்கள் அறிந்திருப்பதை பயன்படுத்திக்கொள்ளும் சிலர் இயற்கை பொருட்களில் கலப்படம் செய்யும் வேலைகளை செய்து வருகின்றனர். இதனை வாங்கி பயன்படுத்தும் மக்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கலப்பட பொருட்களை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து மக்களுக்கு தெரிவித்து வருகிறது. அந்த வகையில் மிளகில் கலப்படம் உள்ளதை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.நீங்கள் கடைகளில் வாங்கும் மிளகு மற்றும் கருப்பட்டியில், கலப்படமாக உள்ளதா என்பதை அறிய ஒரு எளிய சோதனை முலம் கண்டறியலாம்.
ஒரு சிறிய அளவு கருப்பு மிளகு ஒரு மேஜையில் வைக்கவும்.
உங்கள் விரலால் அதனை அழுத்தவும். கலப்படமற்ற மிளகு எளிதில் உடைந்து போகாது.
ஆளால் கலப்படம் செய்யப்பட்ட மிளகு,வெளிர் கருப்பு பெர்ரி இருப்பதைக் காட்டி எளிதில் உடைந்துவிடும்.
Detecting Blackberries Adulteration in Black Pepper#DetectingFoodAdulterants_9#AzadiKaAmritMahotsav@jagograhakjago @mygovindia @MIB_India @PIB_India @MoHFW_INDIA pic.twitter.com/0hQHrLrS1z
— FSSAI (@fssaiindia) October 6, 2021
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI ) பரிந்துரைத்தபடி, உங்கள் சமையலறை பொருட்களில் கலப்படத்தை சோதிக்க நீங்கள் செய்யக்கூடிய வேறு சில சோதனைளை தனது டவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil