நீங்கள் பயன்படுத்தும் மஞ்சள் நச்சுத்தன்மை வாய்ந்ததா? எப்படி கண்டுபிடிப்பது என்பது இங்கே!

பல இந்திய சமையலறைகளில் மஞ்சள் பிரதானமாக உள்ளது, இது இல்லாமல் சராசரி இந்திய உணவு முழுமையடையாது.

turmeric
FSSAI has shared a simple test to find out your turmeric adulterated with artificial colour

இப்போதெல்லாம், உணவுப் பொருளில் கூடுதல் நிறம் அல்லது செயற்கை சுவை உள்ளதா என்பதைக் கண்டறிவது மிகவும் கடினம். செயற்கையான எதையும் கொண்ட உணவுகள் ஆரோக்கியமானதாக கருதப்படுவதில்லை.

பல இந்திய சமையலறைகளில் மஞ்சள் மிகவும் பிரதானமாக உள்ளது, இது இல்லாமல் ஒரு சராசரி இந்திய உணவு முழுமையடையாது. ஆனால் மஞ்சளில், செயற்கை நிறம் கலப்படம் செய்யப்படுகிறது.

எனவே, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நீங்கள் பயன்படுத்தும் மஞ்சள் தூய்மையானதா என்பதைக் கண்டறிய ஒரு எளிய சோதனையைப் பகிர்ந்துள்ளது.

ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், அது வழிமுறைகளை விளக்கியுள்ளது:

* இரண்டு கிளாஸ் தண்ணீரை எடுத்து, அதில் சிறிய அளவு மஞ்சள் சேர்க்கவும்.

* கலப்படமில்லாத மாதிரி வெளிர் மஞ்சள் நிறமாக மாறுவதை நீங்கள் கவனிப்பீர்கள், மஞ்சளானது அடியில் படியும்.

* மறுபுறம் கலப்படம் செய்யப்பட்ட மஞ்சள், வலுவான, பிரகாசமான மஞ்சள் நிறமாக மாறும்.

மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய்க்கு எதிரான பண்புகள் உள்ளன, பங்களாதேஷில் விளையும் மஞ்சளில், சாதாரண அளவை விட 500 மடங்கு அதிக நச்சுத்தன்மை கொண்ட ஹெவி மெட்டல் ஈயம் இருப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது.

மஞ்சள் விளையும் ஒன்பதில், ஏழு மாவட்டங்களில், ‘குரோமேட்’ எனப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த பிரகாசமான மஞ்சள் நிற ஈயம் கொண்ட கலவையுடன் கலப்பட மஞ்சளை உற்பத்தி செய்ததாக அது கூறுகிறது.

இந்த ஆய்வு செப்டம்பர் 17, 2019 அன்று சுற்றுச்சூழல் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டது. அதன் படி, ஈயம் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது, நரம்பு செல்களை பாதிக்கிறது. எனவே ஜாக்கிரதை!

அத்துடன் சமீபத்தில், நீங்கள் சந்தையில் இருந்து வாங்கிய “புதிய, பச்சை காய்கறிகளில்” கலப்படம் உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிய FSSAI ஒரு சோதனையைப் பகிர்ந்துள்ளது,

* திரவ பாரஃபினில் நனைத்த காட்டன் பஞ்சு-ஐ எடுத்துக் கொள்ளுங்கள்.

* வெண்டைக்காய் அல்லது பச்சை காய்கறிகள் தோலில் லேசாக தேய்க்கவும்.

* காட்டன் பஞ்சு’ நிறம் மாறாமல் இருந்தால், அது கலப்படமற்றது.

* பச்சை நிறமாக மாறினால், அதில் கலப்படம் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Simple test to find out your turmeric adulterated with artificial colour

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com