மாம்பழம் வாங்கும்போது இதை கவனிங்க!

மாம்பழ சீசன் என்பதால் சுவையான நல்ல மாம்பழங்களை எப்படி தேர்ந்தெடுத்து வாங்குவது என்பது பற்றி பார்க்கலாம்.

mangoes

தற்போது மாம்பழ சீசன் களைகட்டியுள்ளது. இந்தியாவில் பிரபலமான மாம்பழ வகைகளில் சாவுசா, லெங்க்ரா, கேசர், டோட்டாபுரி, நீலம், படாமி, மல்கோவா மற்றும் பல வகைகள் உள்ளன. மாம்பழங்களை ருசிப்பதற்காக வருடம் முழுவதும் சீசனுக்காக காத்திருக்கிறோம். இருப்பினும், சுவையற்ற அல்லது பழுக்காத மாம்பழத்தை வாங்கும்போது நாம் அடிக்கடி ஏமாற்றமடைகிறோம்.
இதுபோன்ற சூழ்நிலையை தவிர்க்க மாம்பழங்களை எப்படி தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும் என செஃப் குணால் கபூர் விளக்கியுள்ளார். அவர் பகிர்ந்துகொண்ட எளிமையான குறிப்புகளை பார்க்கலாம்.

இது மாம்பழ சீசன் என்பதால் சுவையான மற்றும் புதிய மாம்பழங்களை எவ்வாறு வாங்குவது என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும். பழுத்த மாம்பழங்கள் எப்போதும் தண்டுக்கு அடுத்ததாக ஒரு வலுவான இனிப்பு, மணம் மற்றும் பழ வாசனையை வெளியிடுகின்றன. மாம்பழத்தின் தண்டு நுகரும்போது வாசனையாகவும், அழகாகவும் இருந்தால் அது பழுத்தது. அவற்றை வாங்கலாம். எவ்வாறாயினும் கருப்பு மற்றும் பழுப்பு நிற புள்ளிகள் கொண்ட மாம்பழங்களை தவிர்க்க வேண்டும்.

ஒரு மாம்பழத்தை அதன் நிறத்தை வைத்து முடிவு செய்ய முடியாது. சில பச்சை நிற மாம்பழங்கள் இனிப்பாக இருக்கலாம். சில மஞ்சள் நிற மாம்பழங்கள் சுவையற்றதாகவோ அல்லது புளிப்பாகவோ இருக்கலாம்.

மாம்பழத்தை வாங்கும்போது அது என்ன வகை என விற்பனையாளரிடம் விசாரிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் மாம்பழத்தின் வகைகளை அவற்றின் சுவை அடிப்படையில் எப்படி வேறுபடுத்தி பார்ப்பது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

மாம்பழ சீசன் விரைவாக முடிந்துவிடும். இதனால் சீசன் முடிந்த பிறகும் பல மாதங்களுக்கு அதனை சுவைக்கும் வகையில் மாம்பழ ரெசிபிகளை செய்யலாம். மாம்பழ ப்யூரி செய்து அதை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். கிட்டதட்ட 5 முதல் 6 மாதங்கள் வரை வைத்து இதனை சாப்பிடலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Simple tips for purchasing mangoes

Next Story
பெண்களுக்கு சுயமரியாதை, தன்னம்பிக்கை ரொம்ப அவசியம் – தேவயானி ஷேரிங்ஸ்!Actress Devayani about women in Film industry Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com