/indian-express-tamil/media/media_files/2025/10/08/jasmin-2025-10-08-18-43-58.jpg)
தென்னிந்திய மக்களுக்கு மிகவும் பிடித்த மலர்களில் மல்லிகைப் பூ முக்கிய இடம் பெறுகிறது. திருமணங்கள், கோயில் விழாக்கள் என அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் மல்லிகைப் பூ பெரும் பங்கு வகிக்கிறது. பெரும்பாலும், மல்லிகைப் பூவில் பல ரகங்கள் இருக்கின்றன. குண்டு மல்லி, மதுரை மல்லி, காட்டு மல்லி என பல வகைகள் இருக்கின்றது.
மல்லிகைப் பூ நறுமணத்திற்கு மட்டுமல்லாமல் மருத்துவத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. மல்லிகைப் பூவின் வெண்மை மற்றும் மயக்கும் நறுமணம் காரணமாக, இது 'மலர்களின் ராணி' என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக மதுரை மல்லிக்கு உலகளவில் அதிக மணம் உண்டு. இந்திய பெண்கள் மல்லிகைப் பூவை தங்கள் கூந்தலில் சூடுவதை ஒரு பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகின்றனர். இது மணத்தை மட்டும் கொடுக்காமல் மன அமைதியையும் கொடுக்கிறது.
மல்லிகைப்பூவிலிருந்து எடுக்கப்படும் வாசனைத் திரவியங்கள் மற்றும் எண்ணெய் ஆகியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அதிக பொருளாதாரத்தை ஈட்டித் தருகின்றன. இந்தியாவிலும் மல்லிகைப் பூ எண்ணெய்கள் கூந்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மல்லிகைப்பூவானது சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தில் பல ஆரோக்கிய நன்மைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
மல்லிகைப் பூக்களை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால், வயிற்றில் உள்ள புழுக்கள் நீங்கும். அஜீரணக் கோளாறுகளால் ஏற்படும் வயிற்றுப் புண்கள் குணமாகும். மல்லிகைப் பூவில் தேநீர் போட்டுக் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது என்று கூறுவார்கள். ஆனால், நாம் மல்லிகைப் பூவை உணவாக எடுப்பதை தாண்டி கூந்தலில் சூடி அழகு பார்க்கத் தான் அதிகம் ஆசைப்படுவோம். அப்படி கூந்தலில் வைப்பதற்காக வாங்கிய மல்லிகைப் பூவை ஃபிரிட்ஜ் இல்லாமல் நான்கு நாட்கள் வரை எப்படி வாடாமல் வைத்துக் கொள்ளலாம் என்று பார்ப்போம்.
சிம்பிஸ் டிப்ஸ்
ஒரு வெள்ளைத் துணியை தண்ணீரில் நன்றாக நனைத்து எடுத்துக் கொள்ளவும். இதில் மல்லிகைப் பூவை ரவுண்டாக சுற்றி வைக்கவும். இந்த மல்லிகைப் பூவை ஒரு தட்டில் வைத்து தண்ணீர் நிறைந்த பாத்திரத்தின் மேல் மிதக்க விடவும். இந்த பாத்திரத்தை வெயில் மற்றும் ஃபேன் காற்று படும் இடங்களில் வைக்காமல் ஒரு அறையில் வைத்தால் நான்கு நாட்கள் வரை இந்த மல்லிகைப் பூ வாடாமல் இருக்கும். அவ்வப்போது சிறிது தண்ணீரை மற்றும் மல்லிகைப் பூ மேல் தெளித்து விடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.