உப்பு வைத்தே பாத்ரூம் உப்பு கறையை நீக்கலாம்… இந்த டிரிக் டிரை பண்ணுங்க!
வீட்டு பாத்ரூமில் இருக்கும் உப்புக் கறையை எவ்வாறு சுலபமான முறையில் சுத்தம் செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இது நம் வீட்டு கழிப்பறையை சுகாதாரமாக வைத்திருக்க உதவுகிறது.
வீட்டு பாத்ரூமில் இருக்கும் உப்புக் கறையை எவ்வாறு சுலபமான முறையில் சுத்தம் செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இது நம் வீட்டு கழிப்பறையை சுகாதாரமாக வைத்திருக்க உதவுகிறது.
ஒரு வீட்டில் இருக்கும் கழிப்பறை எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அந்த வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். அதன்படி, வீட்டின் பாத்ரூமை எவ்வாறு சுத்தமாக பராமரிக்கலாம் என்று இப்போது காணலாம்.
Advertisment
இதற்கு ஒரு சிறிய பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். இதில் ஒரு கைப்பிடி கல் உப்பு, இரண்டு ஸ்பூன் சோடா உப்பு மற்றும் ஒரு சிறிய பாக்கெட் ஷாம்பூ ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்தக் கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளலாம். வீட்டில் ஸ்ப்ரே பாட்டில் இல்லாதவர்கள் பழைய கூல் டிரிங் பாட்டிலின் மூடியில் துவாரங்கள் போட்டு அதனை பயன்படுத்தலாம்.
இனி பாத்ரூமில் விடாப்படியான உப்புக் கறைகள் இருக்கும் பகுதி முழுவதும் இந்த கலவையை ஸ்ப்ரே செய்ய வேண்டும். இதனை சிறிது நேரத்திற்கு அப்படியே ஊற வைக்க வேண்டும். இதையடுத்து ஒரு ஸ்க்ரப்பரை கொண்டு உப்புக் கறைகள் இருக்கும் இடங்களை தேய்க்க வேண்டும்.
Advertisment
Advertisements
அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உப்புக் கறை விடாப்பிடியாக இருந்தால், ஸ்க்ரப்பரில் சிறிது ஷாம்பூ போட்டு துடைக்கலாம். இல்லையென்றால் வெறும் ஸ்க்ரப்பர் கொண்டு மட்டுமே துடைத்தால் கூட போதுமானதாக இருக்கும்.
இந்தப் பொருட்களை பயன்படுத்தி சுத்தம் செய்யும் போது உப்புக் கறைகள் முற்றிலும் நீங்கி விடும். மேலும், இதில் அதிகப்படியான இரசாயனங்கள் சேர்க்காததால் நம்முடைய கைகளிலும் எரிச்சல் இல்லாமல் இருக்கும்.