வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் பல நேரங்களில் ஐஸ் கெட்டியாக இருக்கும். இதனால் ஃப்ரீசரில் மற்ற பொருள்களை வைப்பதற்கும், ஃப்ரீசரை சுத்தப்படுத்தவும் கடினமாக இருக்கும். இதற்கான தீர்வு குறித்து தற்போது பார்க்கலாம்.
முதலில் ஃப்ரிட்ஜை சுத்தப்படுத்துவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக ஆஃப் செய்துவிட வேண்டும். இதனால் கெட்டியாக படிந்துள்ள ஐஸ் கட்டிகளை கைகளால் அகற்ற முடியும். கூர்மையான பொருள்களைக் கொண்டு ஐஸ் கட்டிகளை அகற்ற முயற்சிக்க வேண்டாம். இவை ஃப்ரிட்ஜை சேதப்படுத்த வாய்ப்புள்ளது.
இதன் பின்னர், பாதி உருளை கிழங்கை இரு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். வெட்டிய உருளை கிழங்கு மீது கத்தியை வைத்து கீறல்கள் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் மீது உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உப்பு தடவிய பகுதியைக் கொண்டு ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு தேய்த்தால் அதிகமாக ஐஸ் கட்டிகள் சேராது. ஏற்கனவே சேர்ந்த ஐஸ் கட்டிகளும் கரைந்து விடும். இதை செய்யும் போது ஃபிர்ட்ஜ் முக்கியமாக ஆஃப் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அதன்பின்னர், ஒரு துணி கொண்டு ஃப்ரீசரை துடைத்து விடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“