கிச்சன், கேஸ் முழுக்க எண்ணெய் கறை... பவுடர் கலந்த தண்ணீரில் இப்படி வச்சு துடைத்து பாருங்க!
கிச்சனில் இருக்கும் கேஸ் அடுப்பு உள்ளிட்ட பொருட்களை எவ்வாறு சுலபமான முறையில் சுத்தம் செய்வது என்று இந்தக் குறிப்பில் காணலாம். இதற்காக முகத்திற்கு பயன்படுத்தும் பௌடர் இருந்தால் போதும்.
கிச்சனில் இருக்கும் கேஸ் அடுப்பு உள்ளிட்ட பொருட்களை எவ்வாறு சுலபமான முறையில் சுத்தம் செய்வது என்று இந்தக் குறிப்பில் காணலாம். இதற்காக முகத்திற்கு பயன்படுத்தும் பௌடர் இருந்தால் போதும்.
வீட்டை சுத்தமாக பராமரிப்பது சவாலாக இருக்கும். அதிலும், கிச்சனை சுத்தமாக வைத்திருப்பது கூடுதல் சவாலாக இருக்கும். நாம் எவ்வளவு தான் கிச்சனை சுத்தப்படுத்தினாலும், அவை சிறிது நேரத்தில் மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.
Advertisment
குறிப்பாக, எண்ணெய் கறைகள் படிந்து இருக்கும் கேஸ் அடுப்பு மற்றும் டைல்ஸ்களை கழுவுவது சிரமமாக இருக்கும். எனினும், இந்த வேலையை ஒரு சிம்பிளான டிப்ஸ் மூலம் எளிமையாக மாற்ற முடியும். இதற்காக கடைகளில் இருந்து தனியாக சோப் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சமாக தண்ணீர் நிரப்ப வேண்டும். இந்த தண்ணீரில், நாம் முகத்திற்கு பயன்படுத்தும் பௌடரை ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கலக்க வேண்டும். இப்போது இதே தண்ணீரில் ஒரு துணியை நன்றாக நனைத்து, அந்த துணியை வைத்து கேஸ் அடுப்பின் மேற்பகுதியை நன்றாக அழுத்தி துடைக்க வேண்டும்.
இப்படி செய்தால் அடுப்பின் மேற்பகுதியில் இருக்கும் எண்ணெய் உட்பட அனைத்து விதமான கறைகளும் நீங்கி விடும். இதேபோல், அடுப்பின் பின்புறத்தில் இருக்கும் டைல்ஸ்களிலும் அதிகமான எண்ணெய் கறைகள் இருக்கும். இதனையும் இந்த தண்ணீர் கொண்டு கழுவலாம். இது மட்டுமின்றி முகம் பார்க்கும் கண்ணாடி உள்ளிட்டவற்றையும் இதை பயன்படுத்தி சுத்தப்படுத்த முடியும்.
Advertisment
Advertisements
இவ்வாறு செய்வதன் மூலம் கடைகளில் இருந்து அதிக பணம் கொடுத்து சோப் போன்ற பொருட்கள் வாங்குவதை தவிர்க்க முடியும். மேலும், இப்படி செய்யும் போது குறைவான அளவு மட்டுமே தண்ணீர் தேவைப்படும். இது போன்ற சிம்பிள் டிப்ஸை பின்பற்றி நம் கிச்சனை சுத்தமாக பராமரிக்கலாம்.