நம்மில் பலருக்கு மழை பிடிக்கும் என்றாலும், மழைக் காலங்களில் துணிகளை காய வைப்பது சவாலான காரியமாக இருக்கும். அந்த வகையில் வீட்டின் உள்ளேயே துணிகளை காய வப்பதற்கான வழிமுறைகளை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.
வீட்டில் இருக்கும் பழைய பிளாஸ்டிக் வாளியின் மேற்புறத்தை வெட்டி எடுத்து அதில் துணி சுற்றிவிட வேண்டும். அதில் சிறிய துணிகளை க்ளிப் போட்டு வீட்டிற்குள் காய வைக்கலாம்.
ஹார்டுவேர் கடைகளில் இருந்து S வடிவிலான கொக்கியை வாங்கி கொள்ள வேண்டும். இரண்டு S கொக்கிகளுக்கு இடையே கயிறு கட்டி இரு முனைகளையும் ஜன்னல் கம்பிகளில் மாட்டி விட்டால், இந்த கொடிகளில் துணியை காய வைக்கலாம்.
இந்த கொடிகள் மீது துணிகளை நேரடியாக போட்டால், சிறிய அளவிலான துணிகளை மட்டுமே காய வைக்க முடியும். எனவே, ஹேங்கர் கொண்டு துணிகளை இதில் தொங்க விட்டால் நிறைய துணிகளை காய வைக்கலாம். சிறிய துணிகளாக இருந்தால் ஒரே ஹேங்கரில் சுமார் 2 அல்லது 3 துணிகளை தொங்க விடலாம்.
ஹார்டுவேர் கடைகளில் துணிகளை காய வைப்பதற்கென்றே கம்பிகள் கிடைக்கின்றன. அவற்றை நாம் வாங்கி சுவற்றில் மாட்டிக் கொண்டால் எளிதாக துணிகளை காய வைக்கலாம் இதேபோல், மல்டிபிள் கம்பிகள் கொண்ட ஸ்டாண்டும் துணி காய வைப்பதற்கு உதவியாக இருக்கும். இவற்றை கடைகளில் இருந்து வாங்கி பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“