நம் வீட்டிலேயே இஞ்சி செடியை வளர்த்து அறுவடை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம். மிக எளிய முறையை கையாள்வதன் மூலம் இரசாயனம் கலக்காத இஞ்சி நமக்கு கிடைக்கும்.
ஒரு பாத்திரத்தில் ஆற்று மணலை எடுத்து தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இஞ்சி விதைப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக மணலை ஈரப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், முழு இஞ்சியை மணலில் போட்டு மூடி விட வேண்டும். இளம் இஞ்சியை இதற்காக பயன்படுத்தக் கூடாது.
மணலின் மேற்பரப்பு காயும் வரை இதற்கு தண்ணீர் தெளிக்க கூடாது. சில நாள்களுக்கு பின்னர் இஞ்சியை வெளியே எடுத்து பார்த்தால் அதில் இலைகள் துளிர் விட்டிருப்பது தெரியும். அதையடுத்து, இஞ்சியை மீண்டும் மணலில் புதைத்து விட வேண்டும்.
இஞ்சியில் இருந்து இலைகள் ஓரளவிற்கு மேலே வரும் வரை நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும். சுமார் 6 இலைகள் மேலே தெரியும்படி வந்ததும், இந்த இஞ்சி இலைகளை வேருடன் எடுத்து வேறு ஒரு தொட்டிக்கு மாற்றி விடலாம். பின்னர் இத்தொட்டியை வெளிச்சம் படும் இடத்தில் வைத்து, சீராக தண்ணீர் தெளித்து வந்தால் சுமார் 8 மாதங்களில் இரசாயனம் கலக்காத இஞ்சியை அறுவடை செய்து விடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“