பெரும்பாலான வீடுகளில் காலை வடிக்கும் சாதத்தை இரவு வரை பயன்படுத்துவார்கள். குறிப்பாக, காலையிலேயே வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் ஆண்கள், அன்று முழுவதும் தேவையான உணவை காலை நேரத்தில் சமைத்துச் செல்லும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இதனால், அவர்களுக்கு நேரம் மிச்சமாவதுடன் வேலை முடிந்து சோர்வாக வீடு திரும்பும் போது மீண்டும் சமைக்க வேண்டிய தேவை இருக்காது. சாதத்தை காலையிலேயே தயார் செய்யும் பழக்கம் எல்லோரிடமும் இருக்கும். அதனை மதிய உணவுக்காக எடுத்துச் செல்வதுடன், இரவு மீண்டும் அதே சாதத்தை உணவாக எடுத்துக் கொள்வார்கள்.
ஆனால், அவ்வாறு செய்யும் போது சாதம் ஃப்ரெஷ்ஷாக இருக்குமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதற்காக, இந்த மிக எளிய முறையை கையாண்டால் நீங்கள் வடித்த சாதம் நாள் முழுவதும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். இதற்கு ஒரு சுத்தமான வெள்ளைத் துணி இருந்தால் போதுமானது.
வடித்த சாதத்தை ஒரு சுத்தமான வெள்ளைத்துணியில் போட்டு கட்டிய பின்னர், அதை ஹாட்பாக்ஸில் வைக்க வேண்டும். இதனால் சாதத்தின் ஈரப்பதம் துணியில் உறிந்து கொள்ளப்படும் போது, நீண்ட நேரத்திற்கு சாதம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.