மழைக் காலத்தில் சேதமடையும் பாதங்கள்... இப்படி பத்திரமா பாத்துக்கோங்க!

மழைநீரில் நடந்து வந்த பிறகு, கால்களைத் துடைத்து, ஆண்டி-பங்கஸ் பவுடர் அல்லது பாத பராமரிப்பு க்ரீம்கள் பயன்படுத்துவது மிக அவசியம். இதனை காலணிகளின் உட்புறத்திலும் பூசுவது நல்லது.

மழைநீரில் நடந்து வந்த பிறகு, கால்களைத் துடைத்து, ஆண்டி-பங்கஸ் பவுடர் அல்லது பாத பராமரிப்பு க்ரீம்கள் பயன்படுத்துவது மிக அவசியம். இதனை காலணிகளின் உட்புறத்திலும் பூசுவது நல்லது.

author-image
Mona Pachake
New Update
download - 2025-10-08T125901.131

உடல்நலத்தைப் பேணுவது போலவே நமது பாதங்களின் சுகாதாரமும் மிகவும் முக்கியமானது என்பதை பெரும்பாலானோர் கவனிக்க மறந்துவிடுகிறார்கள். குறிப்பாக மழைக்காலம் வந்துவிட்டால், பாதங்களில் ஏற்படும் தொற்றுகள், வெடிப்புகள் மற்றும் பூஞ்சை வளர்ச்சிகள் நம்மை எச்சரிக்க வேண்டிய கட்டாயத்தைக் காட்டுகின்றன. பாதங்களில் ஏற்படும் தொற்றுகள், சரியான கவனிப்பு இல்லாததன் விளைவாக உருவாகின்றன. இதற்கு முறையான முன்னெச்சரிக்கைகள் அவசியம் என்று என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisment

மழை காலத்தில் பாதங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன

மழைக்காலத்தில் அதிகரிக்கும் ஈரப்பதம், சாக்கடை நீர் கலந்து வரும் மழைநீர் ஆகியவை, பாதங்களை நேரடியாக பாதிக்கின்றன. மழைநீரில் உள்ள கிருமிகள், பாதங்களில் பூஞ்சை தொற்றுகள் மற்றும் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. அதனால், வீட்டுக்கு வந்ததும் கால்களை சோப்பால் கழுவி, விரல்களுக்கு இடையில் நன்கு துடைத்து ஈரமில்லாமல் வைக்க வேண்டும். விரல்களுக்கு இடையில் ஈரப்பதம் இருந்தால் கிருமிகள் விரைவில் பெருகும்.

சரியான காலணிகளை தேர்வு செய்வது முக்கியம்

மழைக்காலத்தில் பயன்படுத்தப்படும் காலணிகள் ஈரப்பதத்தை தக்கவைக்காத, வாயுப் புகை செல்லும் வகையில் இருக்க வேண்டும். கேன்வாஸ் மற்றும் காட்டன் மாதிரிகள் இதற்குப் பொருத்தமானவை.

  • சிந்தடிக் ஷூக்கள் மற்றும் ஹை-ஹீல்ஸ் போன்றவற்றை தவிர்ப்பது நலம்.
  • வாட்டர்ப்ரூஃப் காலணிகள் அல்லது ரேன் ஷூக்கள் சிறந்த தேர்வாக இருக்கின்றன.
Advertisment
Advertisements

மழைநீரில் நனையக்கூடிய காலணிகள், அதன் உள்ளே கிருமிகள் குடிகொள்ள உகந்த இடமாக மாறுகிறது. அதனால், வீடு திரும்பியவுடன், காலணிகளையும் சுத்தம் செய்து, உலர வைக்க வேண்டும்.

மழைநீரில் நடந்து வந்த பிறகு, கால்களைத் துடைத்து, ஆண்டி-பங்கஸ் பவுடர் அல்லது பாத பராமரிப்பு க்ரீம்கள் பயன்படுத்துவது மிக அவசியம். இதனை காலணிகளின் உட்புறத்திலும் பூசுவது நல்லது. இந்த வகை பாதுகாப்பு, பூஞ்சை தொற்று, நகக்கூம்பல், துர்நாற்றம் ஆகியவற்றைத் தடுக்கும்.

கால் நக பராமரிப்பு

மழைநீரில் நனையும்போது, நகங்களில் தேங்கும் அழுக்கு, பூஞ்சை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே:

  • கால் நகங்களை சுத்தமாக வெட்டுங்கள்
  • நகத்தில் சேரும் அழுக்கை முற்றிலும் அகற்றுங்கள்
  • நக வெட்டும் போது சிறிது இடைவெளியை விடுங்கள், காயமடையாமல் இருக்க

இயற்க்கை வைத்திய பராமரிப்பு

பாதங்களில் வெடிப்பு, வறட்சியைத் தவிர்க்க:

  • தேனும் தேங்காய் எண்ணெயும் சம அளவு கலந்து பாதங்களில் பூசலாம்.
  • வேப்ப எண்ணெய், மஞ்சள் தூள், மற்றும் சூடாக்கிய நெய் சேர்த்துப் பூசுவது, பித்த வெடிப்புகளுக்கு சிறந்த தீர்வாகும்.
  • இந்த எண்ணெய் கலவையை இரவு தூங்குவதற்கு முன் பயன்படுத்தினால் அதிக பலன்.

பாதங்கள் நம் உடலின் அடிப்படை ஆதாரங்களாக இருக்கின்றன. அவற்றின் பாதுகாப்பு நம்முடைய மொத்த உடல் நலத்திற்கே அடித்தளமாக அமைகிறது. குறிப்பாக மழைக்காலத்தில், சிறிய கவனக்குறைவால் கூட பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: