ஒரு டப்பா, சின்ன வாழை இலை, கொஞ்சம் தண்ணீர்.... மீன் 2 மாசம் ஆனாலும் கெடாமல் இருக்க இதுபோதும்!
சமையலுக்காக வாங்கிய மீனை இரண்டு மாதங்கள் கூட கெட்டுப்போகாமல் வைத்திருப்பதற்கான சிம்பிள் டிப்ஸை இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதன் மூலம் நமக்கு தேவைப்படும் போது மீனை எடுத்து பயன்படுத்த முடியும்.
அசைவம் சாப்பிடும் பெரும்பாலானவர்களுக்கு விருப்ப உணவாக மீன் இருக்கும். ஆற்று மீன்கள் தொடங்கி கடல் மீன்கள் வரை ஒவ்வொரு வகையான மீனிலும், வெவ்வேறு விதமான சுவை இருக்கும். இவற்றை எண்ணெய்யில் பொறித்தாலும் சரி, குழம்பாக வைத்து சாப்பிட்டாலும் மிகச் சுவையாக இருக்கும்.
Advertisment
ஆனால், அடிக்கடி மீன் சமைப்பது சற்று சவாலான காரியம். வாரத்தில் சில நாட்களில் மட்டுமே மீன் ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும். மேலும், இவற்றை வாங்கி வந்து சுத்தப்படுத்தி சமைப்பதற்கும் நீண்ட நேரம் ஆகும். இதனால் வேலைக்கு செல்பவர்களுக்கு அடிக்கடி மீன் வாங்கி சமைப்பது சிரமமாக இருக்கும்.
இதன் காரணமாக மீன்களை மொத்தமாக வாங்கி நீண்ட நாட்களுக்கு ஸ்டோர் செய்து வைப்பதற்கான சிம்பிளான டிப்ஸ் இருக்கிறதா என்று பலரும் இணையத்தில் தேடி இருப்பார்கள். சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மீன்களை நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
பல முறை சமையலுக்காக மீன் வாங்கி இருப்போம். ஆனால், இந்த சிறிய விஷயத்தை நாம் அறிந்திருக்க பெரிதும் வாய்ப்பில்லை. ஒரு டப்பா எடுத்து அதற்குள் சிறிதளவு தண்ணீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். இந்த டப்பாவிற்குள் செல்லும் அளவிற்கு ஒரு சிறிய மூடியை இதற்குள் வைக்க வேண்டும். இதற்கு மேற்பகுதியில் இரண்டு வாழை இலைகளை வெட்டி வைக்க வேண்டும்.
Advertisment
Advertisements
இதன் பின்னர், மசாலா போட்ட மீன்களை வாழை இலைகளின் மேல் வைத்து டப்பாவை மூடி விடலாம். மசாலா இல்லாமலும் இந்த முறையில் மீன்களை வைக்கலாம். இந்த டப்பாவை மூடி அப்படியே ஃப்ரிட்ஜின் ஃப்ரீசர் பகுதியில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் இரண்டு மாதங்கள் ஆனாலும் மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
இவ்வாறு செய்தால் நமக்கு தேவைப்படும் நேரத்தில் மீன்களை எடுத்து சமைத்து சாப்பிடலாம். குறிப்பாக, வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி - Indian Recipes kitchen tips Youtube Channel