Advertisment

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் டேங்கி தக்காளி சட்னி

Thakkali Chatni Recipe ரோட்டு கடையில் சாப்பிடுவதுபோன்ற தக்காளி சட்னியை வீட்டிலேயே செய்து இனி சாப்பிடலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Simple Tomato Chutney Thakkali Chutney recipes Tamil

Simple Tomato Chutney Thakkali Chutney recipes Tamil

Thakkali Chutney Tamil : என்னதான் ஹோட்டல்களில் சென்று சாப்பிட்டாலும், ரோட்டு கடை உணவுகளுக்கு எப்போதுமே தனி மவுசுண்டு. அந்த வரிசையில் ரோட்டு கடையில் சாப்பிடுவதுபோன்ற தக்காளி சட்னியை வீட்டிலேயே செய்து இனி சாப்பிடலாம்.

Advertisment

தேவையான பொருள்கள்

பொடியாக நறுக்கிய தக்காளி – 4

உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்

கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 3

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க

கடுகு – 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 1

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

பிறகு தக்காளி, உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும்.

இந்தக் கலவையோடு கடைசியாகக் கொத்தமல்லி சேர்த்துக் கலந்து ஆறவிடவும்.

நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

தாளிப்பதற்குக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து அரைத்த சட்னியோடு சேர்த்துப் பரிமாறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment