நாம் கூந்தல் நல்ல முறையில் வளர்வதற்கு என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் உள்ளது.
இந்நிலையில் நரை முடி வராமல் தவிர்க்க எந்த உணவை எடுத்துகொள்ளலாம் என்பதை தெரிந்துகொள்வோம். சர்க்கரை வள்ளிகிழங்கை நாம் எடுத்துகொள்ளலாம். இது கூந்தல் வளர உதவும். அதுபோல வரட்சியை குறைக்கும். இதனால் கூந்தல் பளபளப்பாக இருக்கும்.
மஞ்சள்
இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. இது நமது கூந்தலின் வேர்களை ஆரோக்கியமாக்கும். ஆரோக்கியமான கூந்தலை சீராக வளர உதவும்.
அவகடோ
இதில் உள்ள வைட்டமின் இ, கூந்தலை சீராக்கும். இது வலுவாக்க உதவும். இதனால் கூந்தல் வேர்கள் அதிக ஆரோக்கியமாக இருக்கும். இதனால் கூந்தல் வேர்கள் மிரதுவாகும்.
புளிக்கவைக்கப்பட்ட அரிசியின் தண்ணீர்
இந்நிலையில் அரிசியின் நீரை நாம் பயன்படுத்தினால், வெள்ளை முடிகள் ஏற்படுவது குறையும். இதில் அமினோ ஆசிட் உள்ளது. இதில் உள்ள வைட்டமின்ஸ் நமது கூந்தலை ஆரோக்கியமாகும்.
கருப்பு எள்
இதில் உள்ள இரும்பு சத்து, வைட்டமின்ஸ் நமது கூந்தல் வளர்வதற்கு உதவுவதோடு, கூந்தலை பளபளப்பாக்கும். இதில் உள்ள அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்ட் செல்களை சேதமடையாமால் பார்த்துகொள்ளும்.
Read in english