நாம் அனைவரும் நீளமான, பளபளப்பான கூந்தலை விரும்புகிறோம். கூந்தலை நீளமாக வளர்ப்பது எப்படி என பல கட்டுரைகள், வலைப்பதிவுகளை படித்து சில டிரிக்ஸ் முயற்சி செய்து பாத்திருப்போம். அதில் சில குறிப்புகள் வேலை செய்யும். சில தோல்வியடையும்.
எனவே உங்கள் தலைமுடியை நீளமாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற முன்னணி அரோமாதெரபிஸ்ட் பரிந்துரைத்த சில குறிப்புகள் இதோ!
விளக்கெண்ணெய்
நீங்கள் கூந்தலை பராமரிக்க அதிக விலைக் கொடுத்து தயாரிப்புகளை வாங்க எந்த அவசியமும் இல்லை. அதைவிட சிறந்த தயாரிப்பு உங்கள் வீட்டிலேயே இருக்கிறது. விளக்கெண்ணெய்-ல் ரிசினோலிக் அமிலம் மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதை உச்சந்தலையில் மசாஜ் செய்யும் போது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. விளக்கெண்ணெயுடன் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயைக் கலந்து பயன்படுத்தினால் சிறந்த முடிவுகள் கிடைக்கும். இதை உங்கள் உச்சந்தலையில் நன்கு தடவி, 10-15 நிமிடங்கள் மசாஜ் செய்து, 20 நிமிடங்களுக்குப் பிறகு முழுமையாக கழுவவும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் முடி விரைவில் வளரும்.
உங்கள் சாப்பாடு தட்டில் என்ன இருக்கிறது?
புரதச்சத்து நிறைந்த உணவு மிகவும் முக்கியம், ஒவ்வொரு நாளும் 50 கிராம் புரதம் அவசியம். நீங்கள் டயட் தொடங்கும் போது அல்லது புரோட்டீன் குறைபாடுள்ள உணவை உட்கொள்ளும் போது உங்கள் முடி உதிரும் அல்லது மெல்லியதாக மாறும். எனவே, உங்கள் உணவில் பருப்பு, முட்டை மற்றும் இறைச்சியின் அளவை அதிகரிக்கவும்.
நீளமான கூந்தலுக்கு வெங்காயச்சாறு!
பலர் இதை உங்களுக்குப் பரிந்துரைத்திருக்க வேண்டும், நீங்கள் இதுவரை முயற்சிக்கவில்லை என்றால், இன்றே முயற்சி செய்யுங்கள். வெங்காயத்தில் உள்ள சல்பேட் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. வாசனையைப் பற்றி கவலைப்பட வேண்டாம், ஏனெனில் ஒரு சிறிய எரிச்சல் உங்களுக்கு நீண்ட கால தீர்வை கொடுக்கும்.
ஆப்பிள் சீடர் வினிகருடன் உச்சந்தலையை சுத்தம் செய்யுங்கள்!
சருமம் பொலிவு பெற ஸ்க்ரபிங் செய்வது வழக்கம். அதன்மூலம் இறந்த சருமம் நீங்கி, புதிய சருமம் வளரும். அதேபோல, உங்கள் தலைமுடியை ஸ்க்ரப் செய்து pH சமநிலையை பராமரிக்க வேண்டும். வினிகர் அதற்கு சரியான தேர்வு, இது முடி வளர்ச்சியை அதிகரிக்கும். நீங்கள் அதை குடிக்கவும் செய்யலாம், இது உங்கள் சருமம் மற்றும் கூந்தல் இரண்டிற்கும் நல்லது. இல்லையெனில் நீங்கள் தலைக்கு குளிக்கும்போது உங்கள் கூந்தலை இறுதியாக அலச பயன்படுத்தலாம். இது முடி வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் தலைமுடிக்கு பிரகாசத்தையும் கொடுக்கும். இதை அதிகமாக செய்ய வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இல்லையெனில் அது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும், வாரத்திற்கு இரண்டு முறை செய்வது நல்லது.
ஒரு முழுமையான மசாஜ்
ஒரு எளிய தலை மசாஜ் உங்கள் முடி வளர்ச்சியில் அதிசயங்களைச் செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் மசாஜ் எண்ணெயில் செய்யலாம் அல்லது எண்ணெய் இல்லாமலும் செய்யலாம். உங்கள் முடி கோட்டின் மையத்தில் தொடங்கி, உங்கள் நடுவிரலைப் பயன்படுத்தி 25 முறை வட்டங்களை உருவாக்கவும். இப்போது இப்போது 3 விரல் இடைவெளியை எடுத்து, உங்கள் தலையின் மையத்தை நோக்கி நகரவும். 25 வட்டங்களை மீண்டும் செய்யவும். மீண்டும் 3 விரல்கள் இடைவெளியை எடுத்து மேலும் கீழே நகர்த்தி வட்டங்களை உருவாக்கவும். உங்கள் காது மடல்களின் பின்புறத்தில் மசாஜ் செய்வதன் மூலம் இதை முடிக்கவும். இது சுமார் 5-7 நிமிடங்கள் எடுக்கும், நீங்கள் அலுவலகத்தில் இருக்கும்போது, டிவி பார்க்கும் போது அல்லது வசதியாக இருக்கும் போது இதைச் செய்யலாம். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து ஆரோக்கியமான மற்றும் நீண்ட கூந்தலை உங்களுக்கு வழங்கும்.
மிக முக்கியமாக கவலைப்பட கூடாது. முடி உதிர்தலுக்கு முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. ஓய்வெடுக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் உங்கள் மனதைப் பயிற்றுவிக்கவும்.
இதை கடைபிடித்தால் நீங்கள் விரும்பிய நீண்ட ஆரோக்கியமான கூந்தல் உங்களுக்கு கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.