வேலை செய்து களைத்துப் போன ஒரு நாளில் யாருக்குத்தான் ஓய்வு எடுக்கப் பிடிக்காது? படுக்கையில் படுத்துக் கொண்டு உங்கள் கால்களை நீட்டி ஒய்வெடுப்பதற்கு பதில், சுவருக்கு நேராக கால்களை தூக்கி வைத்து பயிற்சி செய்யலாம். இந்த யோகா போஸ் உங்களுக்கு ஒய்வளிப்பது மட்டுமின்றி பல்வேறு வகைகளில் உங்கள் உடலுக்கு நன்மைதரும். உடலில் ரத்த சுழற்சி அதிகரிப்பது முதல் உங்கள் ஆற்றலை அதிகரிப்பது வரையும் மற்றும் குதிகால் வலியில் இருந்து நிவாரணம் பெறவும் முடியும். இந்த யோகா பயிற்சியின் பெயர் விபரீதகரணி என்று அழைக்கப்படுகிறது. இதன் பலன்கள் எண்ணற்றவை. இந்த பயிற்சி உங்கள் உடலில் சமநிலைத் தன்மையை ஏற்படுத்துகிறது.
உண்மையில், வெறும் 20 நிமிடங்கள் பயிற்சி செய்வது, நரம்பு மண்டலம் அமைதிப்படுத்தப்படுவதாக கருதப்படுகிறது. மன அழுத்தம் குறைந்து பீதியும் குறைகிறது. உடலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கிறது. பதற்றம் குறைகிறது அல்லது கால்களில் சோர்வு நீங்குகிறது, இடுப்பிலும் சோர்வு குறைகிறது.
இந்த யோகா போஸில் என்ன சிறப்பு?
இது ஒரு எளிமையான பயிற்சி. அதிகமாக வளைந்து கொடுக்கும் தன்மையோ அல்லது வலுவோ தேவையில்லை. மருத்துவக் கண்காணிப்புடன் பெரும்பாலானோர் இதை செய்யலாம்.
நன்மைகள்
கீழ் முதுகு மற்றும் தொடை எலும்புகள் நேராக உதவுகிறது.
தூக்கம் மற்றும் ஜீரண சக்தியை அதிகரிக்க சிறந்த வழியாகும்.
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது அல்லது நின்று கொண்டிருப்பதால் ஏற்படும் பாத வீக்கம், கணுக்கால் வீக்கத்தைக் குறைக்கிறது.
பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளுக்கு இது நல்ல பலன் தரும் பயிற்சியாக கருதப்படுகிறது.
எப்படி காலை மேலே தூக்குவது மற்றும் சுவரில் சாய்ந்திருப்பது?
இந்த பயிற்சியை காலை அல்லது மாலை வேளையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். இந்த பயிற்சிக்கு முன்பாக உடலை தளர்வு செய்யும் பயிற்சிகள் தேவையில்லை. நல்ல ரிசல்ட் கிடைப்பதற்கு, உங்கள் மனதை அமைதிப்படுத்தி உங்கள் மூச்சை முறைப்படுத்தவும். ஆழமாக மூச்சை இழுத்து வெளியே விடவும். நீண்ட சுவாசம் இதயத்துடிப்பை குறைக்கிறது. உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது.
தரையில் படுத்துக் கொள்ளுங்கள் உங்கள் இடுப்பை சுவருக்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் கால்களை சுவருக்கு எதிராக தூக்கவும், உங்கள் இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் செங்குத்தாக கூரையை நோக்கி இருக்குமாறு தூக்குவதை உறுதி செய்யவும்.
கால்கள் சுவருக்கு எதிராக இருக்கட்டும், உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் உள்ளுணர்வுடன் தளர்வு செய்ய முயற்சி செய்யுங்கள்.
உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள், ஆழமாக சுவாசியுங்கள். இதே நிலையில் 20 நிமிடங்கள் இருக்கவும்.
இந்த நிலையில் இருந்து வெளியே வருவதற்கு, உங்கள் முழங்காலை முதலில் வளைக்கவும், பின்னர் சுவரில் இருந்து உங்களை நீங்களே வெளியே தள்ளிக் கொள்ளவும்.
இந்த யோகா பயிற்சியை செய்ய தயாராகிவிட்டீர்களா?
மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் யாரெல்லாம் முயற்சிக்கூடாது?
குளுக்கோமா என்ற கண்நோய், குடலிறக்கம், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.